)
US Iran War, Donald Trump : ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இனி ஈரான் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை எனவும் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி போர் நிறுத்தத்தை இறுதி செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் மீண்டும் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் வெடித்துள்ளது.
மேலும் அவர், "அவர்கள் ஒரு கழிசடைகள். கழிசடை என்றால் என்னவென்று தெரியுமா?, மனநோயாளிகள் என பொருள். அவர்களை வழிநடத்துபவர்களும் மனநோயாளிகள். அவர்கள் கொடூரமான, வன்முறையான மக்கள்.
அவர்களிடம் அணு ஆயுதம் இருந்திருந்தால், அவர்கள் அதை பயன்படுத்தியிருப்பார்கள். என்னைப் பொருத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது" என்றார். மேலும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தாலும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நேரம் வீண்தான் எனவும் பதிலளித்துள்ளார்.
முன்னதாக, ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் தொடுத்ததாக கூறி, அமெரிக்கா ஈரான் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. ஈரானின் துறைமுக நகரங்களான பந்தர் அப்பாஸ் மற்றும் ஷிரிக், கெஷ்ம் தீவுகளில் ஈரான் சொத்துகள் மீது அமெரிக்கா வான்வெளித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஈரானிய கச்சா எண்ணெய் விற்பனைக்கு அளித்த அனுமதியை அமெரிக்கா ரத்து செய்தது. இதற்கு மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளின் மீது ஈரான் பதிலடி தாக்குதல் தொடுத்துள்ளது.
முன்னதாக, ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் உள்ள ஈரானிய ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.
பத்து நாள்கள் முன்பு நடத்தப்பட்ட முந்தைய தாக்குதல்களை விட அளவிலும் சக்தியிலும் நான்கு அல்லது ஐந்து மடங்கு பெரியவை எனறு தகவல்கள் கூறின.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இது தண்டனை என அமெரிக்க அதிகாரி CNN ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய மிகவும் தீவிரமான தாக்குதல்கள் இவை என்றும்; இதனால் ஈரான் - அமெரிக்கா மாறி மாறித் தாக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
போரில் முதற்கட்டமாக, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கு ஈரானின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தபோது அமெரிக்கா இந்த தாக்குதல்களை மேற்கொண்டது.
வரும் வியாழக்கிழமை இறுதிச் சடங்கு நிறைவடைய உள்ளது. இந்த காலகட்டத்தில் பதற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அயதுல்லா அலி கமேனிக்கு துக்கம் அனுசரித்தவர்கள் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை கொல்ல வேண்டும் என முழுங்கியதால் தொடர்ந்து பதற்றம் நிலவியது.
அயதுல்லா அலி கமேனியின் நல்லடக்கத்திற்கு பிறகே, அமெரிக்கா - ஈரான் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்க இருந்தன.
போர் நிறுத்தம் ஏற்பட்டால் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மீண்டும் திறக்கப்படும்; ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட அதிமுக்கியம் வாய்ந்த விவகாரங்களில் இருநாடும் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், புதிய தாக்குதல்களும்; டொனால்ட் டிரம்பின் இன்றைய பேச்சும் சூழ்நிலையை மேலும் மோசமாக்கி உள்ளது. இருப்பினும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் இருந்து முற்றிலும் விலகுமா என்றும் உறுதியாகவில்லை. எனவே, அடுத்தடுத்து..