America Visa Rules: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்காகவோ, படிப்பிற்காவோ ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் செல்கின்றனர். குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் வேலை நிமித்தமாக சென்று வருகின்றனர். இதில் அமெரிக்கா இந்தியர்களுக்கான விசாவை கடுமையாக்கி வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே, விசா முறையில் கடுமையாக மாற்றங்களை கொண்டு வருகிறார்.
இனி அமெரிக்க செல்வது கஸ்டம்
அதோடு, வெளிநாடு பயணிகளுக்கான எச்-1பி விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியது. மேலும், வெளிநாட்டினர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் தான், புதிய விசா கொள்கையை அமெரிக்கா நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவில் குடியேறுவது கடினமாகிவிட்டது. அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்ட தகவலின்படி, சுற்றுலா, மாணவர், வணிக விசா பெற்று அமெரிக்காவிற்குள் வரும் வெளிநாட்டினர், உடல்நிலையை காரணம் காட்டி நீண்ட காலம் அமெரிக்காவில் தங்குகின்றனர். இதனால், அமெரிக்க அரசிடம் மருத்துவ நிதி பெறுகிறார்கள் என குற்றச்சாட்டி உள்ளது.
இதனை தடுக்கும் நோக்கில், நீண்ட காலம் நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க கூடாது என அமெரிக்கா வெளியுறவுத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம், உடல் ரீதியாக ஆரோக்கியமாகவும் நோயற்றவர்களாகவும் உள்ள நபர்கள் மட்டுமே விசாக்களைப் பெறுவார்கள். இனி வரும் நாட்களில் விசா விண்ணப்பதாரர்களின் உடல்நிலை, வயது, நிதி நிலைமை, தொற்று நோய் குறித்த அபாயம் போன்றவை குறித்து கேள்வி கேட்கப்பட உள்ளதாம்.
விசா மறுப்பு
மேலும், விசா விண்ணப்பதாரர்களுக்கு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. முன்பு, காசநோய், எச்ஐவி நோய்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்பட்டன. தற்போது, இப்போது நீரிழிவு, உடல் பருமன், இதய நோய், புற்றுநோய், மனநல பிரச்னை, சுவாச நோய்களுக்கு விசா மறுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
நோய் காரணமாக விண்ணப்பதாரர் அரசு உதவியையோ அல்லது நிதியை சார்ந்து இருப்பாரா என்பதை விசா அதிகாரிகள் இப்போது சரிபார்ப்பார்கள் என்று வழிகாட்டுதல் தெளிவுபடுத்துகிறது. விண்ணப்பதாரர் தங்கள் மருத்துவச் செலவுகளைச் பார்த்து கொள்ளாத பட்சத்தில், அவர்கள் விசா உடனடியாக நிராகரிக்கப்படலாம். மேற்கண்ட நோய்கள் இருப்பின், தங்களது மருத்துவ செலவுகளை தாங்களே பார்த்துக் கொண்டால் மட்டுமே அமெரிக்கா விசா வழங்கப்படுமாம்.
காரணம் என்ன?
இந்த புதிய விதிகள் சுற்றுலா (B-1/B-2), மாணவர் (F-1) மற்றும் பணி விசாக்கள் உட்பட அனைத்து விசா வகைகளுக்கும் பொருந்தும். இருப்பினும், நிரந்தர குடியிருப்புக்கு (கிரீன் கார்டுகள்) விண்ணப்பிப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மேலும், மாணவர் விசா விண்ணப்பதாரர்கள் தங்களிடம் போதுமான நிதி இருப்பதையும், படிப்பின் போது அரசாங்கத்தைச் சார்ந்திருக்க மாட்டார்கள் என்பதையும், படிப்பை முடித்த பிறகு நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்பதையும் நிரூபிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்த நடவடிக்கை பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு இரண்டையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பருமனான நபர்களுக்கு சிகிச்சையளிப்பது ஒரு குறிப்பிடத்தக்க செலவாகும். இது அரசாங்கத்தின் சுகாதார பட்ஜெட்டை பாதிக்கிறது. எனவே, உடல் தகுதி இப்போது விசா வழங்குவதற்கான முதன்மை அளவுகோலாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அட கொடுமையே.. வீட்டை சுத்தம் செய்யலனா இப்படியா? மனைவி செய்த காரியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









