)
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2021 தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, பல நலத்திட்ட உதவிகளை நிறைவேற்றி வருகிறார். திமுக ஆட்சியில் தற்போது வரை கொண்டு வரப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளிட்ட திட்டங்களால், மாணவர்கள் முதல் குடும்ப தலைவிகள் வரை அனைவரும் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக பழங்குடியினருக்கு ஏராளமான நலத்திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் உரிய ஆலோசனைகளை அரசுக்கு வழங்கிட தமிழ்நாடு ஆதி திராவிட மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக தொண்டாற்றிவரும் ஒருவருக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் அண்ணல் அம்பேத்கர் விருதின் பரிசுதொகையை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.
மேலும், நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்படி பல நலத்திட்ட உதவிகளை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு திமுக அரசு செய்துள்ளது. இந்த நிலையில் தான், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்தை கையில் வைத்தபடி ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழக அரசின் திட்டம் குறித்து தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் சுகுமார் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான டான்சானியாவில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம் கூறி உள்ளார். இந்த திட்டத்தை பார்த்து வியந்த ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி பாராம்பரிய உடையில் நடனமாடி பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசிய ஒருவர், இங்கு அனைவராலும் பள்ளிக்கு செல்ல முடியாது. இலவச கல்வி திட்டம் என்பது கிடையாது. குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு பணம் கட்டிதான் ஆக வேண்டும். இன்னும் பலர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள். அவ்வபோது சில நண்பர்கள் எங்கள் கிராமத்திற்கு வருவார்கள். அவர்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு உதவி செய்வார்கள் என கூறினார். மேலும், பழங்குடியினருக்கு நலதிட்ட உதவிகள் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ