)
Female Traveler Harassment Sri Lanka Video : நியூசிலாந்தை சேர்ந்த சுற்றுலாபயணி ஒருவர், இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட போது தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு காணலாம்.
இலங்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்!
நியூசிலாந்தை சேர்ந்த பெண் சுற்றுலாபயணி ஒருவர், சமீபத்தில் இலங்கைக்கு தனியாக பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, சாலை வழியாக பயணிக்க இலங்கையில் ‘டுக் டுக் வண்டி’ என்று அழைக்கப்படும் ஆட்டோ ரிக்ஷாவை வாடகைக்கு எடுத்து அதில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார்.
சம்பவம் நடந்த அந்த தினம், தான் சன் ரைஸ் பார்த்து விட்டு, நீச்சலடித்து விட்டு நன்றாகத்தான் அந்த நாளை தொடங்கியதாகவும், இப்படி ஒரு விஷயம் அன்று நடக்கும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்.
துரத்தி வந்த ஸ்கூட்டர்..!
“ஒரு ஆள் எனக்கு முன்பு ஸ்கூட்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவ்வப்போது அவர் வண்டியை ஸ்லோ செய்த போதெல்லாம் நான் முந்தி சென்று கொண்டிருந்தேன், பின்னர் அவரும் என்னை துரத்தியவாறு வேகமாக வந்தார்” என்று கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் அவரை பார்த்து தான் சிரித்ததாகவும், பின்பு தனக்கு அவரது நடவடிக்கை அசௌகரியத்தை அளித்ததால் அங்கிருந்து நகர்ந்த்தாகவும் கூறியிருக்கிறார்.
தான் ரெஸ்ட் எடுப்பதற்காக ஒரு இடத்தில் நிறுத்திய போது அவர் மீண்டும் வந்து ஸ்கூட்டியை விட்டு இறங்கி தன்னிடம் பேச வந்ததாகவும், அவர் சினேகத்துடன் பேசியதால் அவரை பேச விட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
அநாகரிக செயல்!
அப்பெண்ணிடம் பேசிய அந்த நபர், “எங்கு தங்கியிருக்கிறீர்கள், எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். அப்போது தான் அசௌகரியமாக உணர ஆரம்பித்ததாக கூறியிருக்கும் அந்த பெண், தன்னை அவர் உடலுறவுக்கு அழைத்ததாக கூறியிருக்கிறார். பின்பு, சுய இன்பம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இதனால் சட்டென சுதாரித்துக்கொண்ட அந்த பெண், உடனே ஆட்டோவை கிளப்பிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கிறார். இந்த அநாகரிக செயல், அவர் ஆட்டோவில் வைத்திருந்த கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண், தான் பேசியிருக்கும் வீடியோவில் தனது கோபத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். தான் ‘நோ’ சொல்லியும் அந்த நபர் எப்படி இப்படியொரு அநாகரிகமான செயலை செய்யலாம் என்று அவர் அந்த வீடியோவில் கேள்வி எழுப்புகிறார். இதை வீடியோவாக போஸ்ட் செய்யும் முன்பு தான் நிறைய யோசித்ததாகவும், வேறு வழியின்றி இதனை பகிர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் குறித்து..
அந்த பெண், கேப்ஷனில் இன்னும் சில விஷயங்களையும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த ஒரு நபரின் செயல்பாடு மட்டும் இலங்கையின் ஒட்டுமொத்த மனநிலையையும் காண்பித்து விடாது என கூறும் அவர், இங்கு தான் சந்தித்த மக்கள் பரந்த மனதுடையவர்கள் என்றும், எப்போதும் கனிவாக நடந்து கொள்பவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் இருக்கும் 23 வயதான நபர், தற்போது போலீஸாரின் பிடியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ