Watch Video American Plane Catches Fire At Denver : அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில், விமானம் புறப்படத் தயாரான நிலையில், ரன் வேயில் சென்றபோது திடீரென தீ பற்றியதால் விமானிகள் பீதியடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அவசர வழி வழியாக வெளியேறினர். சாதுர்யமாக செயல்பட்டதால் மிகப்பெரிய விபத்து மற்றும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
விமானத்தில் தீ விபத்து!
அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில், சனிக்கிழமையன்று, அமெரிக்கன் ஏர்லைன்ஸ்க்கு சொதமான, போயிங் 737 MAX 8 என்ற விமாமனம், மியாமிக்கு புறப்படுவதற்காக தயார் நிலையில் இருந்தது.
இந்த விமானத்தில் 173 பயணிகள் இருந்தனர். இதையடுத்து ரன்வேயில், வேகமாக சென்றபோது, தரையிறங்கும் கியர் செயலிழப்பால் தீப்பிடித்து ஓடுபாதையில் புகை ஏற்பட்டது. இதனையடுத்து, விமானி துரிதமாக செயல்பட்டு, விமானத்தை உடனடியாக நிறுத்திவிட்டு, அவசர வழி வழியாக, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
தீ பற்றியதன் காரணமாக அப்பகுதியில் புகை சூழ்ந்து காணப்பட்டது. இந்த விமானத்தில் சென்ற 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
வைரல் வீடியோ:
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பயணிகள் ஒவ்வொருவராக விமானத்தில் இருந்து உயிரை பிடித்துக்கொண்டு இறங்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Boeing?
If so ...it should be banned
You can't let them play with others life https://t.co/Qjfj7orzDh pic.twitter.com/Cx4H4FH92G— Ms.पॉजिटिविटी (@No__negativtyxd) July 27, 2025
பீதியடைந்த பயணிகள்..
இதன் பின்னர், தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். துரித நேரத்தில் விமானம் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
பீதியடைந்த பயணிகள் விமானத்திலிருந்து அவரமாக வெளியேறுவது மற்றும் தரையிறங்கும் கியரில் தீப்பிடித்து எரிவது அந்த வீடியோ பதிவில் தெளிவாக பதிவாகியுள்ளன.
உயிர் தப்பினர்!
கடந்த ஐந்து மாதங்களில், டென்வர் விமான நிலையத்தில் நடைபெற்ற 2-வது தீ விபத்து என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில், டல்லாஸ் செல்லும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் - போயிங் 737-800 - விமான நிலையத்தில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில், 172 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் படிக்க | காணாமல் போன ரஷ்ய விமானம் காட்டுப்பகுதிக்குள் கிளம்பிய புகை நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









