ஈரான் வன்முறைக்கு யார் காரணம்? 2000 பேர் பலி! ட்ரம்ப்பின் 25% வரி மிரட்டல் -போர் மூளுமா?

USA Vs Iran: ஈரான் மீண்டும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தெருக்கள் பற்றி எரிகின்றன. கோபமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. அமெரிக்க - ஈரான் இடையிலான போர் பதற்றம். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 14, 2026, 10:11 AM IST
ஈரான் வன்முறைக்கு யார் காரணம்? 2000 பேர் பலி! ட்ரம்ப்பின் 25% வரி மிரட்டல் -போர் மூளுமா?

Iran Protests 2026: ஈரான் நாடு மீண்டும் ஒருமுறை போராட்டங்களால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. வீதிகளில் மக்கள் கடும் ஆக்ரோஷத்துடன் போராடி வருகின்றனர். ஈரான் அரசு தற்போது உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மிகப்பெரிய அழுத்தத்தை சந்தித்து வருகிறது.

Add Zee News as a Preferred Source

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25% கூடுதல் இறக்குமதி வரி (Tariff) விதிக்கப்படும் என்று அண்மையில் அறிவித்துள்ளார். இது ஈரானின் பொருளாதாரத்தை மேலும் நசுக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறம், அமெரிக்காவின் இந்தத் தடைகளை ரஷ்யா கடுமையாகச் சாடியுள்ளது.

ஈரானில் என்ன தான் பிரச்சனை?

அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக ஈரானிய ஆட்சிக்கு எதிராக குடிமக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதால், ஈரான் மீண்டும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களில் அந்த நாடு காணாத மிகப்பெரிய போராட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஈரானிய நாணயமான 'ரியால்' (Rial) மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. இதனால் உணவு மற்றும் எரிபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

கிளர்ந்தெழுந்த ஈரானிய மக்கள்

ஈரானில் நடந்து வரும் வன்முறை மற்றும் மோதல்கள் காரணமாக இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த மரணங்களுக்கு "தீவிரவாதிகள்" தான் காரணம் என்று ஈரான் அரசு குற்றம் சாட்டுகிறது.

அதே சமயம், மக்களின் நியாயமான பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு அரசு நேர்மையான பதிலளிக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கின்றன.

ஈரான் வன்முறைக்கு யார் காரணம்?

ஈரானிய உயர்மட்டத் தலைவர் கமேனியின் ஆதரவாளர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சதி என்று அவர்கள் கருதுகின்றனர். 

அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளால் ஈரானால் தனது கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையில் விற்க முடியவில்லை. இது அந்நாட்டின் வருமானத்தைப் பெருமளவில் பாதித்துள்ளது.

ஈரானை குறிவைக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப் 

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த பிறகு, இந்த அமைதியின்மை தீவிரமடைந்தது. ஈரானைத் தண்டிப்பதற்கான கூடுதல் வழிகளை கண்டறிய அமெரிக்கா தயாராகி வருகிறது. அதே நேரத்தில் இராஜதந்திர நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன. அதாவது பேச்சுவாரத்தைக்கு கதவுகள் திறந்தே இருக்கிறது எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை-ஆ, போர்-ஆ: ஈரானிய அதிபர் கேள்வி

ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அரசாங்க ஆதரவுப் பேரணியில் கலந்து கொண்டார். அமெரிக்காவுடன் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும், அதே நேரத்தில் போருக்குப் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானின் தற்போதைய நிலை என்ன?

ஈரான் அரசு தற்போது ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது. ஒருபுறம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயம், மறுபுறம் உள்நாட்டு மக்களின் போராட்டத்தை அடக்க வேண்டிய நெருக்கடி.

அமெரிக்காவின் ராணுவ நகர்வுகள்

ஈரான் மீது அமெரிக்கா அடுத்தகட்டமாகத் தாக்குதல் நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கத்தாரில் உள்ள அல்-உடைத் (Al Uday) விமானப்படைத் தளம் அதிக சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது. இங்கு 10000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 19 இடங்களில் அமெரிக்கா தனது ராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது.

ஈரானை தாக்கிய அமெரிக்கா - இஸ்ரேல்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அணுசக்தி திட்டங்களை காரணம் காட்டி ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி! டிரம்ப் எச்சரிக்கை.. இந்தியாவுக்கு பாதிப்பா?

மேலும் படிக்க - இந்தியாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா! 500% வரி விதிக்க டிரம்ப் பச்சைக்கொடி! 

மேலும் படிக்க - 2026ல் காத்திருக்கும் பேரழிவுகள்.. பயமுறுத்தும் பாபா வங்கா கணிப்புகள்! முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News