Israel - Iran Conflict: இஸ்ரேலை குறிவைத்து ஈரான் அதன் சக்திவாய்ந்த Sejjil-2 ஏவுகணை மூலம் நேற்று தாக்குதல் தொடுத்தது. இது ஏன் கவனிக்கப்பட வேண்டிய தாக்குதல் என்பதை இங்கு காணலாம்.

Israel - Iran Conflict: இஸ்ரேல் - ஈரான் இடையிலான பதற்றம் தினந்தினம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இந்த பதற்றம் இரு நாடுகளையும் கடுமையாக பாதிப்பது மட்டுமின்றி சர்வதேச அரங்கில் பெரும் தாக்கத்தையும் செலுத்துகிறது.
Israel - Iran Conflict: Sejjil-2 ஏவுகணை தாக்குதல்
இந்த சூழலில் ஈரான், அதன் வலிமையான ஆயுதங்களில் ஒன்றான Sejjil-2 ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது. Operation True Promise III என்ற பெயரில், இஸ்ரேலை குறிவைத்து ஈரான் இந்த தொடர்ச்சியாக இந்த ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இது ஈரானின் தாக்குதல் வியூகத்தில் குறிப்பிடத்தக்க நகர்வு என்றும் சொல்லலாம். Sejjil-2 ஏவுகணை என்றால் என்ன?, இதன்மூலம் ஈரான் தொடுத்த தாக்குதல் ஏன் முக்கியமாகிறது?, இது ஈரான் - இஸ்ரேல் மோதலில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Sejjil-2 Missile: 2,000 கி.மீ., குறிவைத்த தாக்குதல்
Sejjil-2 என்பது ஈரானின் ஈரானின் மிகவும் மேம்பட்ட அதிநவீன நடுத்தர தூர பாலிஸ்டிக் ஆயுதத்தில் ஒன்றாகும். திட எரிபொருள் இயந்திரம் மற்றும் நீண்ட தூர திறனுக்காக Sejjil-2 ஏவுகணை பெயர்பெற்றது. Sejjil-2 சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் மற்றும் 700 கிலோகிராம் வெடிபொருளை சுமந்துசெல்லும் திறன் கொண்டதாகும். எதிரி நாட்டினுள் ஆழமாக சென்றும், துல்லியமாகவும் தாக்குதலை தொடுக்க இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது எனலாம்.
Sejjil-2 Missile: ஏவுகணையை முறியடிப்பது கடினம்
Sejjil-2 ஏவுகணையின் தனித்துவமே, அதன் இரண்டு நிலை திட-எரிபொருள் உந்துவிசை எனலாம். பழைய திரவ-எரிபொருள் ஏவுகணைகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளளும். ஆனால் இவை அப்படி இல்லை. விரைவாக இருக்கும். மேலும் இதனை அடையாளம் கண்டு அந்த தாக்குதலை முறியடிப்பது மிக மிக கடினம் எனலாம். Sejjil-2 ஏவுகணையின் வீச்சு, இஸ்ரேல் மட்டுமின்றி மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை தாக்கும் வகையில் உள்ளது எனலாம். ஈரான் நாட்டின் ராணுவத்தின் மதிப்பை கூட்டும் ஒரு ஆயுதமாகவும் இது உள்ளது. குறிப்பாக, இதை ஒரு உளவியல் ஆயுதம் என்றும் கூறலாம்.
Sejjil-2 Missile: 2008ஆம் ஆண்டு முதல்...
ஈரானி இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஈரானிய ஆயுதப் படைகளின் பல சேவைகளைக் கொண்ட முதன்மைப் பிரிவாகும். அந்த வகையில், Sejjil-2 குறித்து IRGC கூறுகையில், "Sejjil-2 நாட்டின் மிகவும் துல்லியமான மற்றும் போர் வியூகத்தில் முக்கிய ஏவுகணைகளில் ஒன்று" என்று விவரிக்கிறது. 2008ஆம் ஆண்டில் அதன் முதல் வெற்றிகரமான பயன்பாட்டுக்கு பிறகு பல சோதனை ஏவுதல்கள் மூலம் அதன் வழிகாட்டுதல் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
Sejjil-2 Missile: இஸ்ரேலிய மீது ஈரான் தாக்குதல்
IRGC தகவலின்படி, Sejjil-2 மூலம் ஈரான் நேற்று (ஜூன் 19) இஸ்ரேலை தாக்கி உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு இது பதிலடி என்றும் ஈரான் தெரிவித்தது. இந்த ஏவுகணை இஸ்ரேலின் அதிக மதிப்புள்ள இராணுவ இலக்குகளை குறிவைத்து ஏவுப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இஸ்ரேல் இதுகுறித்து கூறுகையில், Sejjil-2 ஏவுகணை தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும், மேலும் அந்த ஏவுகணை சிதறி அதன் பாகங்கள் பொதுமக்களின் வாகனத்தில் விழுந்ததாகவும் தெரிவித்தது.
Sejjil-2 Missile: கவனிக்கப்பட வேண்டிய தாக்குதல்
ஏவுகணை முறியடிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், ஈரானின் இந்த தாக்குதல் என்பது ஈரானின் குறிப்பிடத்தக்க நகர்வாக பார்க்க வேண்டும். ஈரான் அதன் மிகப்பெரிய மற்றும் மிக நீண்ட தூர ஆயுதக் களஞ்சியத்தைப் பயன்படுத்தி போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கத்தை குறிக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ