)
AI Jobs 2025: ஒட்டுமொத்த டெக் உலகமே ஆண்டுகண்டு வருகின்றன. பல நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். மனிதர்கள் செய்துவந்த வேலைகளுக்கு தற்போது மாற்று வந்துவிட்டது.
இந்த அனைத்து பிரச்னைகளுக்கெல்லாம் மூலக்காரணமாக இருப்பது செயற்கை நுண்ணறிவுதான் (AI). AI மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பைச் சந்தித்து வரும் சூழலில், AI துறையில் பயிற்சி பெற்றவர்களின் கதையே தற்போது மொத்தமாக மாறியுள்ளது. AI வல்லுநர்களுக்கு செழிப்பான எதிர்காலம் காத்திருக்கிறது எனலாம்.
கல்லூரிகளில் AI படிப்புடன் பட்டம் பெறும் பட்டதாரிகள் தற்போது அதிக சம்பளத்திற்கு வேலைக்கு போகிறார்கள். அவர்கள் தங்களின் இறுதித் தேர்வை எழுதும் முன்னரே முன்னணி நிறுவனங்களில் பெரிய பெரிய வாய்ப்பு கிடைக்கின்றன. நிறுவனங்களும் AI வல்லுநர்களை வேலைக்கு எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் போட்டி கடுமையாக உள்ளது, சம்பளம் உயர்ந்துள்ளது. AI பயின்ற 25 வயதுக்குட்பட்ட புதிய பணியாளர்கள் சிலர் ஏற்கனவே கோடீஸ்வரர்களாகிவிட்டனர் என்றால் பாருங்கள்.
AI படிப்புகளை முடித்த பட்டதாரிகளுக்கு கேம்ப்ஸ் மூலமே வேலைவாய்ப்புகள் உறுதியாகின்றன. அதிலும், மாணவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்னரே அவர் AI படிப்புகளை முடிந்திருந்தால் அவர்களை தேடிச்சென்று நிறுவனங்கள் வேலை அளிக்கின்றன. முன்னர் போல், வழக்கமான கோடிங் உள்ளிட்டவற்றை மட்டும் வைத்துக்கொண்டு இனி பிழைப்பு ஓட்ட முடியாது. AI படிப்புகளை முடிக்காவிட்டால் உங்களுக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம் பெரிதாகிவிடும். AI படிக்காதவர்கள் பின்தங்கிவிட வாய்ப்புள்ளது. AI படித்தவர்களுக்கு மட்டும் சம்பளம் இனி கொட்டும்.
Burtch Works எனும் வேலைவாய்ப்பு சார்ந்த தளம் வெளியிட்ட தரவுகளின்படி, 0-3 வருட அனுபவமே கொண்ட ஆரம்பக் கட்ட AI பயின்ற பணியாளர்களுக்கான சம்பளம் 12% அதிகமாகி இருக்கிறது. AI பணியாளர்களின் ஆரம்பகட்ட ஊதியத்தின் அளவுகோளையே மாற்றியமைத்திருக்கிறது என கூறப்படுகிறது. AI பயின்ற பணியாளர்களுக்கு பதவி உயர்வும் வேகமாக கிடைக்கிறது, பணியில் வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கிறது. வழக்கமான மென்பொருள் பொறியாளர்களுக்கும், AI போன்ற Machine Learning பொறியாளர்களுக்கும் உண்டான சம்பள வித்தியாசம் மிகப்பெரியது என அமெரிக்காவின் Maryland பல்கலைக்கழகத்தின் வணிகத்துறையில் AI வேலை கண்காணிப்பின் இணைத் தலைவர் அனில் குப்தா என்பவர் தெரிவித்துள்ளார்.
DataBricks மென்பொருள் நிறுவனத்தின் சிஇஓ அலி கோட்ஸி என்பவர் அதிக எண்ணிக்கையிலான இளம் பணியாளர்களை அவர் பணிக்கு எடுக்கும் நடைமுறை குறித்து பேசியிருந்தார். அதில் பெரும்பாலானோர் 25 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் அவர் கடினமான பணிகளை மேற்கொள்வதாகவும் அதனால் அவர்களின் ஊதியமும் அதிகளவு இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர், "நீங்கள் 25 வயதை அடையும் முன்பே ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை சம்பாதித்துவிடலாம்"என்கிறார். இந்திய மதிப்பில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் என்பது ரூ.8.5 கோடி எனலாம்.
எந்தெந்த முன்னணி நிறுவனங்கள் எவ்வளவு சம்பளத்தில் AI படித்த பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
- Roblox: இந்த கேமிங் நிறுவனம் AI படித்தவர்களுக்கு சராசரியாக ஓராண்டுக்கு ரூ.1.75 கோடியை சம்பளமாக வழங்கி வருகிறது.
- Scale AI: இந்த செயற்கை தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் கல்லூரி முடித்து வரும் பட்டதாரிகளுக்கு முதற்கட்டமாக ஓராண்டுக்கு ரூ.1.75 கோடி அளவுக்கு சம்பளம் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.
- Databricks: இந்த நிறுவனம் ஆரம்பக் கட்ட ஊழியர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.1.66 கோடி முதல் ரூ.2.17 கோடி வரை ஊதியம் வழங்குகிறது. 25 வயது குறைவான அதுவும் சிறப்பாக பணியாற்றக் கூடியவர்கள் ஆண்டுக்கு ரூ.8.5 கோடி ஊதியம் வாங்குகிறார்கள்.
இதுபோன்ற அதிகளவு சம்பளம் கொடுப்பதால் பல முனைவர் பட்ட ஆய்வாளர்களும் தங்களின் ஆய்வை பாதியில் நிறுத்திவிட்டு பெருந்நிறுவனங்களில் பணிக்கு இணைந்துவிடுவதாக கூறப்படுகிறது. எனவே, தற்போது மென்பொருள் பொறியியல் படித்து வரும் மாணவர்கள் தங்களின் படிப்பு உடன் AI சார்ந்த படிப்புகளை படிக்க வேண்டும் என ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதேநேரத்தில் முதலில் இளநிலை கல்வியை வலுவாக பயின்று கொள்ள வேண்டியது அவசியம். இளநிலை படிப்பை முடித்த பின்னரே AI படிப்புகளில் கவனம் செலுத்துவது நல்லது.
அடிப்படை சிறப்பாக இருந்தால்தான் வலுவான கட்டடத்தை எழுப்ப முடியும். எனவே, அவசரப்படாமல் உங்களின் இளநிலை கல்வியுடன் சேர்த்தே கூட AI படிப்புகளை படியுங்கள். ஆனால் AI படிப்பை இளநிலை படிப்பாக அமைத்துக்கொள்ளாதீர்கள் என கல்வியாளர்கள் மாணவர்களை எச்சரிக்கின்றனர். AI படிப்புகளுக்கு கணிதம் மிக முக்கியம், எனவே அதையும் சரியாக தெரிந்துகொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ