ரயில்வே ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: தீபாவளி போனஸை தொடர்ந்து அதிரடி டிஏ ஹைக்

DA Hike For Railway Employees: ரயில்வே வாரியம் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்தில் 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 24, 2023, 08:12 AM IST
  • ரயில்வே வாரியம் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.
  • 15,000 கோடி ரூபாய்க்கான போனஸுக்கு ஒப்புதல்.
  • தீபாவளிக்கு முன்னதாக வந்த இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு.
ரயில்வே ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: தீபாவளி போனஸை தொடர்ந்து அதிரடி டிஏ ஹைக் title=

அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசும் பல மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது ரயில்வே வாரியமும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரயில்வே வாரியம் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (Dearness Allowance) அடிப்படை சம்பளத்தில் 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த முறையும் ரயில்வே வாரியம் டிஏவை 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும். 23 அக்டோபர் 2023 அன்று 'அனைத்திந்திய ரயில்வே மற்றும் உற்பத்தி பிரிவுகளின்' பொது மேலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு வாரியம் இது தொடர்பாக ஒரு கடிதம் எழுதியது.

அகில இந்திய ரயில்வே மற்றும் உற்பத்தி பிரிவுகளின் பொது மேலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அக்டோபர் 23, 2023 அன்று எழுத்துப்பூர்வமாக அனுப்பிய கடிதத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை தற்போதுள்ளதை விட உயர்த்துவது குறித்து முடிவு செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அகவிலைப்படி 42% -இலிருந்து 46% ஆக உயரும் என்றும் இது ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 7வது CPC பரிந்துரையின்படி பெறப்படும் ஊதியம் 'அடிப்படை ஊதியம்' என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு ஊதியம் போன்ற வேறு எந்த ஊதியத்தையும் இது உள்ளடக்கவில்லை.

15,000 கோடி ரூபாய்க்கான போனஸுக்கு ஒப்புதல்

ரயில்வே ஊழியர்களின் (Railway Employees) அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவதற்கான இந்த முடிவை எடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ரயில்வே வாரியம் எழுதியுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி தற்போது இருந்த 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும். சமீபத்தில் 15,000 கோடி போனஸுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து ரயில்வே வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் டிஏ உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஜூலை முதல் நிலுவைத் தொகையுடன் அடுத்த மாத சம்பளத்தில் உயர்த்தப்பட்ட டிஏ -வும் (DA Hike) கிடைக்கும்.

தீபாவளிக்கு முன்னதாக வந்த இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு 

தீபாவளிக்கு முன் வந்துள்ள இந்த அறிவிப்பை ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். இது குறித்து அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் சிவகோபால் மிஸ்ரா கூறுகையில், 'ஊழியர்களுக்கு ஜூலை முதல் டி.ஏ., கிடைக்க வேண்டி இருந்தது. அதை பெறுவது ஊழியர்களின் உரிமை. தீபாவளிக்கு முன்னதாக அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி எடுக்கப்பட்ட முடிவை வரவேற்கிறேன்." என்றார். இந்திய ரயில்வேயின் தேசிய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம்.ராகவய்யா, "நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் டிஏ வழங்கப்படுகிறது. பணவீக்கம் (ஊழியர்களை) பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்." என்று கூறினார்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ட்ரிபிள் மகிழ்ச்சி: டிஏ அரியரால் அதிரடி ஏற்றம், கணக்கீடு இதோ

முன்னதாக, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான போனஸ் (Bonus) தொகை பற்றி அறிவித்தது. இந்த போனஸ் பணம் தீபாவளிக்கு முன் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும். இது தவிர, அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களே... டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்பித்து விட்டீர்களா... இல்லையென்றால் சிக்கல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News