DA, DR உயர்வு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோரின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா?

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி சமீபத்தில் உயர்த்தப்பட்டு, டிஏ 50% மதிப்பை எட்டி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 16, 2024, 06:59 AM IST
  • அரசு ஊழியர்களுக்கு 4% DA உயர்வு.
  • ஜனவரி 2024 முதல் அமலுக்கு வரும்.
  • தற்போது DA 50% எட்டியுள்ளது.
DA, DR உயர்வு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோரின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா?  title=

7th Pay Commission Dearness Allowance hike: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) சமீபத்தில் 4% உயர்த்தப்பட்டு 50% ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் 4% முதல் 50% வரை அதிகரித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜனவரி 1ம் தேதி கணக்கின் படி நடைமுறைக்கும் வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய நிகழ்வுகளில் அகவிலைப்படி 50% ஐ எட்டும்போது, ​​DA மற்றும் DR அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டது.  எனவே,இ இந்த முறையும் அதே போல் இணைக்கப்படுமா என்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் எதிர்பார்த்து உள்ளனர்.  

மேலும் படிக்க | Paytm Fastag மாற்ற கடைசி வாய்ப்பு! இன்றே கடைசி நாள்.... இல்லையென்றால் 2 மடங்கு கட்டணம்

இந்தியாவில் உள்ள சில மூத்த சட்ட அலுவலகங்களின் கருத்துப்படி, 7வது ஊதியக் குழு அறிக்கை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் பரிந்துரைக்கவில்லை என்றும் DA அல்லது DR ஆனது 50 சதவீதத்தை அடைந்துவிட்டதால், ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் தானாகவே இணைக்கப்படாது.  5 வது ஊதியக் குழு அகவிலைப்படி 50% ஐ தாண்டியவுடன் முதலில் அடிப்படை சம்பளத்துடன் இணைக்க பரிந்துரைத்தது. 2004 ஆம் ஆண்டு கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய பலன்களைக் கணக்கிடுவதற்கான அகவிலைப்படியை உருவாக்க, அடிப்படை ஊதியத்தின் 50% அகவிலைப்படி இணைக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்பட்டனர்.  இருப்பினும் கூட, ஆறாவது ஊதியக் குழு உட்பட அடுத்தடுத்த மானிய குழுக்கள், இந்த இணைப்பைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தனர்.

அகவிலைப்படி ஆனது 50% ஐ எட்டும்போது, ​​மத்திய அரசு ஊழியர்களுக்கு அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு அலவன்ஸ்கள் அதிகரிக்கும். தற்போது உயர்ந்துவரும் பொருளாதார வீதங்களை கணக்கில் கொண்டு, செலவை சமாளிக்க ஊழியர்களுக்கு உதவியாக, அகவிலைப்படி உடன் வீட்டு வாடகை கொடுப்பனவு, தினசரி கொடுப்பனவு மற்றும் பணிக்கொடை உச்சவரம்பு போன்ற கொடுப்பனவுகளும் உயர்கின்றன. அரசின் இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்கள் பலரிடையே சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அகவிலைப்படி மற்றும் DR ஆகியவை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா என்பது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மனதில் உள்ள பெரும் குழப்பமாக உள்ளது.  இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது கிட்டத்தட்ட 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும்.

என்ன என்ன கொடுப்பனவுகள் அதிகரிக்கும்?

வீட்டு வாடகை கொடுப்பனவு, குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு கொடுப்பனவு, விடுதி மானியம், இடமாற்றத்தின் போது போக்குவரத்து கொடுப்பனவு, பணிக்கொடை உச்சவரம்பு, ஆடை கொடுப்பனவு, சொந்த போக்குவரத்துக்கான மைலேஜ் கொடுப்பனவு, தினசரி கொடுப்பனவுகள் ஆகியவை ஆகும்.  மேலே குறிப்பிடப்பட்டுள்ள கொடுப்பனவுகள் சேவை, இருப்பிடம் மற்றும் குழந்தைக் கல்வி மற்றும் குழந்தைப் பராமரிப்பு போன்ற குறிப்பிட்ட கொடுப்பனவுகள் உட்பட குறிப்பிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 

மேலும் படிக்க | அகவிலைப்படியுடன் அதிகரிக்கும் பிற அலவன்சுகள்: பம்பர் ஊதிய ஏற்றம், ஊழியர்கள் ஹேப்பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News