வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே இனி வங்கிகள் செயல்படும்?

வங்கிகளுக்கு மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை தினமாக அளிக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 17, 2022, 11:19 AM IST
  • வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை.
  • ஆர்பிஐ-யிடம் வங்கி ஊழியர்கள் கோரிக்கை.
  • தற்போது இரண்டு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.
வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே இனி வங்கிகள் செயல்படும்?  title=

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கியின் வேலைநாட்களை வைக்கும்படி கோரிக்கை வைத்திருந்தனர், இதுகுறித்து இந்தியன் வங்கி சங்கத்தின் மூத்த ஆலோசகருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஊழியர்கள் கூறுகையில், விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் வாரத்தின் மற்ற ஐந்து வேலைநாட்களில் கூடுதலாக 30 நிமிடங்கள் வேலை செய்கிறோம் என்றும், தற்போதுள்ள வேலை நேரத்தை காலை 30 நிமிடங்களுக்கு மாற்றி அமைக்கலாம் என்றும் கூறியுள்ளனர். 

மேலும் படிக்க | இந்த வங்கிகளில் அக்கவுண்ட் இருக்கா? வாட்சப்பிலேயே பணம் அனுப்பலாம்!

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (ஏஐபிஇஏ), வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (என்சிபிஇ), வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு (என்ஓபிடபுள்யூ), மற்றும் இந்திய தேசிய வங்கி ஊழியர் சம்மேளனம் (ஐஎன்பிஇஎஃப்) ஆகிய நான்கு வங்கி தொழிற்சங்கங்களும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வங்கியின் வேலை நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது.   கடந்த செப்டம்பர் 23ம் தேதியன்று நிலுவையில் உள்ள வங்கிகளின் பல்வேறு சிக்கல்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது, அந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது வாரத்திற்கு ஐந்து நாட்கள் வங்கியின் வேலை நாட்களை மாற்றுவது குறித்து.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அளித்திருந்த கடிதத்தில் தற்போது வங்கி ஊழியர்களுக்கு மாதத்தின் 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகள் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது, இதனை நாங்கள் எதிர்க்கிறோம் எங்களுக்கு மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை தினமாக அளிக்க வேண்டும் என்று கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.  மேலும் விடுமுறை தினத்தை எப்படி ஈடுசெய்யலாம் என்றும் சங்கம் சார்பாக கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News