வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

New Rules from May 01: வங்கி கட்டணம் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை மே 1ம் தேதி இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம் ஏற்பட உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 1, 2024, 06:53 AM IST
  • இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்.
  • சிலிண்டர்கள், வங்கி விதிகளில் மாற்றம்.
  • பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படலாம்.
வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!  title=

New Rules from May 01: ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் பல முக்கிய மாற்றங்கள் மற்றும் விதிகள் நடைமுறைக்கு வருகிறது. கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி தொடர்பான விதிகள் வரை பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.  இந்நிலையில், ஏப்ரல் மாதம் முடிந்த பிறகு, இன்று மே மாதம் துவங்கி உள்ள நிலையில்,  புதிய விதிகள் நடைமுறைக்கு வர உள்ளன. இந்த மே மாதத்தில் பல நிதி சம்பந்தமான விதிகளில் மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. இதனால் சாமானியர்களின் பைகளில் நேரடி தாக்கம் ஏற்படலாம். இன்று முதல் எந்த விதிகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். 

மேலும் படிக்க | உணவகத்தில் அதிகம் சாப்பிட்டாலும் குறைவாக பில் கட்டலாம்! ‘இதை’ செய்து பாருங்கள்..

எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாதமும் எல்பிஜி சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. இன்று முதல் 14 கிலோ எடை கொண்ட வீட்டு சிலிண்டர் மற்றும் 19 கிலோ வணிக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், PNG மற்றும் CNG விலைகளும் இன்று புதுப்பிக்கப்படும்.

யெஸ் வங்கியின் புதிய விதிகள்

யெஸ் பேங்க் சேமிப்புக் கணக்கு தொடர்பான விதிகளை மே 1 இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. அதன்படி, யெஸ் வங்கியின் குறைந்தபட்ச சராசரி இருப்பு தொகையில் மாற்றம் வந்துள்ளது. புரோ மேக்ஸ் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.50 ஆயிரம் இருக்க வேண்டும், இல்லை என்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதேசமயம் சேவிங் அக்கவுண்ட் ப்ரோ பிளஸ், யெஸ் ரெஸ்பெக்ட் எஸ்ஏ மற்றும் யெஸ் எசென்ஸ் எஸ்ஏ ஆகியவற்றில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.25 ஆயிரமாக இருக்கும். இதனை பராமரிக்கவில்லை என்றால் அபராதமாக ரூ.750 வசூலிக்கப்படும். 

HDFC வங்கி FD திட்டம்

மூத்த குடிமக்களுக்கான சிறப்பு திட்டம் HDFC வங்கியால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்நிலையில், HDFC வங்கி வாடிக்கையாளர்கள் மூத்த குடிமக்கள் பராமரிப்பு FDல் முதலீடு செய்ய மே 10, 2024 வரை மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த FDக்கு 0.75 சதவீத கூடுதல் வட்டி விகிதத்தின் பலனை HDFC வங்கி வழங்குகிறது. மேலும், 5 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கு 7.75 சதவீத வட்டி கிடைக்கும்.

ஐசிஐசிஐ வங்கி

HDFC போலவே ஐசிஐசிஐ வங்கியும் மே 1, 2024 முதல் சேமிப்புக் கணக்கு தொடர்பான விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. டெபிட் கார்டுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ. 200 ஆகக் குறைக்கப்பட உள்ளது. அதேசமயம், கிராமப்புறங்களில் டெபிட் கார்டுக்கான கட்டணம் ரூ. 99 ஆக உள்ளது. மேலும் காசோலை மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை விதிகளிலும் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. காசோலையில் முதல் 25 பக்கத்திற்கு வங்கி கட்டணம் வசூலிக்காது. ஆனால் அதன் பிறகு பயன்படுத்தும் ஒவ்வொரு காசோலைக்கும் 4 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர் IMPS மூலம் பரிவர்த்தனை செய்தால், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2.50 முதல் ரூ.15 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | வருகிறது மலிவான ஏசி, ஃப்ரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின்.. முகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News