செக்கில் கையொப்பமிடும் போது ‘இந்த’ தவறுகளைச் செஞ்சுடாதீங்க!

Cheque Issue: அதிகப் பணம் செலுத்த காசோலை கொடுக்க வேண்டும் என்ற நிலையில், காசோலை புத்தகம் (Cheque Book) வைத்திருப்பது அவசியம். அதில் உங்கள் பெயர், கணக்கு எண் போன்ற தகவல்கள் இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 28, 2023, 04:56 PM IST
  • காசோலையில் கையொப்பம், பெயர், தொகை போன்ற விவரங்களை நிரப்ப நிரந்தர மை பேனாவை மட்டுமே பயன்படுத்தவும்.
  • உங்கள் சிறிய தவறு பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தலாம்.
  • மோசடியில் இருந்து பாதுகாப்பதே இதன் நோக்கம்.
செக்கில் கையொப்பமிடும் போது ‘இந்த’ தவறுகளைச் செஞ்சுடாதீங்க! title=

பெரும்பாலான வங்கிகள் கணக்கைத் திறக்கும் நேரத்தில், பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் காசோலைப் புத்தகத்தையும் வழங்குகின்றன. எந்த ஒரு அதிகார பூர்வ பரிவர்த்தனையிலும், அதிகப் பணம் செலுத்த காசோலை கொடுக்க வேண்டும் என்ற நிலையில், காசோலை புத்தகம் (Cheque Book) வைத்திருப்பது அவசியம். அதில் உங்கள் பெயர், கணக்கு எண் போன்ற தகவல்கள் இருக்கும். அதை பணம் செலுத்த ஒருவரிடம் கொடுக்கும் போது, விபரங்களை நிரப்பி கையொப்பமிட வேண்டும். உங்கள் கையெழுத்து இல்லாத காசோலை செல்லுபடியாகாது. இது தவிர, சில தவறுகள் செய்வதன் காரணமாகவும் உங்கள் காசோலை பவுன்ஸ் ஆகலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது மட்டுமின்றி, மோசடி செய்பவரிடம் பலியாகலாம். எனவே, இன்று உங்களுக்காக செக்கில் கையெழுத்திடும் போது தவிர்க்க வேண்டிய சில தவறுகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அவற்றை நீங்கள் செய்தால், நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கலாம்.

1.  சரியாக கையொப்பம் இடாமல் இருத்தல்

பெரும்பாலும் நீங்கள் அவசரமாக ஒரு காசோலையில் கையொப்பமிடுகிறீர்கள் என்னும் போது, உங்கள் கையெழுத்து வங்கியில் கொடுக்கப்பட்ட கையெழுத்தை போல் அல்லாமல் தவறாக ஆகலாம். எனவே, நீங்கள் ஒரு காசோலையில் கையெழுத்திடும்போது, ​​உங்கள் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு கவனமாக கையெழுத்திட முயற்சிக்கவும். உங்கள் கையொப்பம் சரியாக இருந்தால், உங்கள் காசோலை பவுன்ஸ் ஆகலாம்.

2. வெற்று காசோலைகளில் கையெழுத்திட வேண்டாம்

காசோலையை  கொடுக்கும் போது, பலர் கையொப்பமிட்ட ஒரு வெற்று காசோலையை விட்டுவிடுகிறார்கள். இதை தவிர்க்க வேண்டும். செக் அதாவது காசோலையை வழங்கும் போது, அதில் தொகை மற்றும் பெயரை கண்டிப்பாக எழுத வேண்டும்.  அதனை பின்பற்றாதபோது, உங்களுக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தலாம். காசோலை கொடுப்பவரின் பெயர், தேதி மற்றும் தொகையை எழுதிய பின்னரே காசோலையில் கையொப்பமிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

3. நிரந்தர மை வகையை பயன்படுத்தவும்

காசோலையில் கையொப்பம், பெயர், தொகை போன்ற விவரங்களை நிரப்ப நிரந்தர மை பேனாவை மட்டுமே பயன்படுத்தவும். அத்தகைய சூழ்நிலையில், செக்கில் உள்ள தகவல்களை அழித்து விட்டு, வேறு எழுத முடியாது. அதன் மூலம் எந்தவிதமான மாற்றங்களையும் செய்ய முடியாது. இதன் மேலும் நீங்கள் மோசடியில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள்.

4. கையெழுத்திட்ட  வெற்று காசோலைகளை யாருக்கும் கொடுக்க வேண்டாம்

யாருக்கும் வெற்று காசோலையை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் ஒருவரை எவ்வளவு நம்பினாலும், நீங்கள் கையொப்பமிட்ட வெற்று காசோலையை அவர்களுக்கு ஒரு போதும் கொடுக்காதீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் காசோலையில் உள்ள தொகையை நிரப்புவதன் மூலம் உங்கள் கணக்கில் இருந்து யார் வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம்.

5. காசோலையில் Only என்று எழுத மறக்காதீர்கள்.

காசோலையில் தொகையை எழுதுவதோடு, கடைசியாக அதில் only என எழுத வேண்டும். மோசடியில் இருந்து பாதுகாப்பதே இதன் நோக்கம். நீங்கள் எழுதவில்லை என்றால், மோசடி நபர் யாரேனும், அதில் அதிக தொகையைச் சேர்க்கலாம்.

6. கேன்சல் செய்யப்பட்ட காசோலை

கணக்கு விவரங்களுக்கான காசோலையை ஆவணமாகத் தருமாறு உங்களிடம் கேட்கப்பட்டால், நீங்கள் வெற்று அல்லது கையொப்பமிடப்பட்ட காசோலையைக் கொடுக்க கூடாது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதில் கேன்சல்ட் என்று எழுதி காசோலை கொடுக்க வேண்டும்.

7. தொலைபேசி எண் இல்லாமல் காசோலை கொடுக்க வேண்டாம்

கையொப்பமிடப்பட்ட காசோலையை நீங்கள் ஒருவரிடம் கொடுக்கும்போது, ​​பெயர், தொகை மற்றும் பிற விவரங்களுடன், காசோலையின் பின்புறத்தில் உங்கள் கையொப்பம் மற்றும் வங்கியுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை எழுதுங்கள். இது பல விஷயங்களில் பயனுள்ளதாக இருக்கும்.

 

 

Trending News