ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி - இளைஞர்கள் விரும்பும் 'இந்த புதிய' முதலீடு - என்னது அது?

Fractional Investment: இளைஞர்கள் தற்போது பாரம்பரியமான முதலீட்டு முறையை விட பகுதியளவு முதலீட்டு முறையில் முதலீடு செய்யவே விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 17, 2024, 10:08 PM IST
  • ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்வது பாரம்பரிய முறை எனலாம்.
  • கொஞ்சம் ரிஸ்க் உடன் நிறைய வருவாயை தரும் முதலீடுகளும் உள்ளன.
  • இந்த முறையில் தற்போதைய இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி - இளைஞர்கள் விரும்பும் 'இந்த புதிய' முதலீடு - என்னது அது? title=

Fractional Investment: நீங்கள் வருவாய் ஈட்டுபவராக இருந்தால் அதில் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வது அவசியமாகும். குறிப்பாக, முதலீட்டின் அவசியம் என்பது இந்த காலகட்டத்தில் பலராலும் உணரப்பட்டுள்ளது எனலாம். ஏனென்றால், கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து காணப்படுகிறது. 

குறிப்பாக, Fractional Investment எனப்படும் பகுதியளவு முதலீட்டை இளைஞர்கள் அதிகம் மேற்கொள்வதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியளவு முதலீட்டின் மூலம் பல்வேறு விஷயங்களில் இளைஞர்கள் தங்களின் பணத்தை முதலீடு செய்கின்றனர். இதுபோல் பகுதியளவு முதலீடை செய்பவர்களில் 60% பேர் இளைஞர்கள்தான் என தெரிவித்துள்ளனர்.

பகுதியளவு முதலீடு என்றால் என்ன?

குறிப்பாக, பங்குச் சந்தைக்கு வெளியே முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த பகுதியளவு முதலீடு என்பது நல்ல ஆப்ஷனாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு விஷயத்தில் நீங்கள் முழுமையாக முதலீடு செய்ய வேண்டாம் என நினைத்தால், அதில் ஒரு பகுதியை மட்டும் வாங்குவது என்பதே பகுதியளவு முதலீட்டை சுருக்கம் எனலாம். அந்த விஷயம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். அது பழைய காராகவும் இருக்கலாம், அது சிறிய நிலமாகவும் இருக்கலாம், பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குகளாக கூட இருக்கலாம். இதனை நீங்கள் சரியாக புரிந்துகொண்டால் சிறிய தொகையை வைத்துக்கொண்டு பெரிய விஷயங்களில் கூட முதலீடு செய்யலாம். 

மேலும் படிக்க | அதிக லாபம் கொடுக்கும் முதலீடு எது? தங்கம்... வெள்ளி... பங்குச்சந்தை? விரிவான அலசல்...

இளைஞர்கள் விரும்பும் முதலீடு

Grip Invest எனப்படும் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை வைத்து மேற்கொண்ட ஆய்விலேயே இந்த பகுதியளவு முதலீடு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இப்போது தனியார் பங்கு, கலைப்பொருள்கள் மற்றும் பழமைவாய்ந்த பொருள்களின் சேகரிப்புகளில் முதலீடு செய்யும் வாய்ப்புகளும் அதிகரித்துவிட்டன.  60% பரிவர்த்தனைகள் 40 வயதுக்குட்பட்டவர்களால் செய்யப்படுகின்றது என Grip Invest நிறுவனம் அதன் ஆன்லைன் தளம் மூலம் கிடைத்த தரவுகள் குறித்து தெரிவித்துள்ளது. மேலும் 21 வயதான இளைஞர்களும் அதிக லாபம் தரும் விஷயங்களில் முதலீடு செய்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

அதிலும் இளைஞர்கள் எவ்வித இடைத்தரகர்களும் இல்லாமல் தங்களின் ஆய்வுகளின் பேரிலேயே முதலீடு செய்கின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர். அதாவது 77 சதவீதம் பேர் தங்களின் சொந்த ஆய்வின் அடிப்படையிலேயே முதலீடு செய்கின்றனர். இவர்கள் கவனமாக முதலீடு மேற்கொள்ள நினைப்பார்கள். 1981ஆம் ஆண்டில் இருந்து 1996ஆம் ஆண்டு வரையில் (தற்போது 28-43 வயதினர்) பிறந்தவர்களை Millennials என்றழைப்பார்கள். இவர்கள்தான் இந்த பகுதியளவு முதலீட்டில் அதிகம் பங்குபெறுகின்றனர். அதுமட்டுமின்றி Gen X (Generation X) எனப்படும் 1965ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு (44-59 வயதினர்) பிறந்தவர்களும் இந்த பகுதியளவு முதலீட்டில் 20 சதவீதம் பேர் ஆவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரு முக்கிய காரணங்கள்

பாரம்பரியமான முதலீட்டு முறைக்கு பதிலாக இந்த பகுதியளவு முதலீடை இளைஞர்கள் அதிகம் பின்பற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.  சந்தை ஏற்ற இறக்கத்தை கருத்தில்கொண்டு, இளைஞர்கள் மற்ற வழிகளில் முதலீட்டை செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒருவரின் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையை செபி தற்போது 90 சதவீதம் வரை குறைத்துவிட்டது. இதுவே, முதலீட்டாளர்கள் பகுதியளவு முதலீட்டிற்கு திரும்ப காரணம் எனப்படுகிறது. முன்னர், குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை என்பது 1 லட்ச ரூபாயாக இருந்த நிலையில், அது தற்போது 10 ஆயிரம் ரூபாயாக செபியால் குறைக்கப்பட்டுள்ளது. 

30 வயதில் இருந்து 45 வயதானவர்கள் மத்தியில் முதலீடு செய்யும் பழக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. முன்னர், பாரம்பரிய முறையிலான முதலீடாக குறைந்த ரிஸ்கில் முதலீடு செய்ய விரும்புவார்கள். ஆனால் தற்போது அவர்கள் கொஞ்சம் ரிஸ்க் உடன் அதிக லாபத்தை தரும் முதலீட்டை நோக்கி நகர தொடங்கிவிட்டனர். இதனால்தான் மற்ற முதலீட்டு முறைகள் நோக்கி முதலீட்டாளர்கள் நகரத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. முதலீட்டு முறை மாறியதற்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் ஒரு காரணம் என்றால், முதலீட்டை எளிமையாக்கியது மற்றொரு காரணம் என்கின்றனர். செபியின் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை மாற்றத்திற்கு முன் குறைவானவர்களே மற்ற முதலீட்டு முறைகளில் முதலீடு செய்தனர்.

(பொறுப்பு துறப்பு: Zee News எந்த விதமான முதலீட்டையும் இங்கு அறிவுறுத்துவதில்லை, எந்த உத்தரவாதத்தையும் இங்கு அளிக்கவில்லை. எந்த விதமான முதலீட்டையும் செய்யும் முன், கண்டிப்பாக முதலீடு சார்ந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்)

மேலும் படிக்க | அசத்தலான 5 முதலீடு திட்டங்கள்! வயதான காலத்தில் பண கஷ்டம் இருக்காது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News