SIP: பரஸ்பர நிதியத்தில் முதலீடு... ‘இந்த’ தவறுகளை செய்யாதீங்க..!!

SIP முதலீட்டு முறை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எளிதாக்கியுள்ளது. SIP அல்லது முறையான முதலீட்டுத் திட்டம், ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதம் தோறு அல்லது காலாண்டு தோறும் முதலீடு செய்யும் முறையாகும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 15, 2024, 06:03 PM IST
  • சேமிப்பை விட முதலீட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
  • நிதி இலக்குகளுக்குப் பதிலாக வருமானத்தில் கவனம் செலுத்துதல்.
  • SIP முதலீட்டை பாதியில் நிறுத்துவது.
SIP: பரஸ்பர நிதியத்தில் முதலீடு... ‘இந்த’ தவறுகளை செய்யாதீங்க..!! title=

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் வேகமாக அதிகரித்து வருகின்றனர். SIP ஆனது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எளிதாக்கியுள்ளது. SIP அல்லது முறையான முதலீட்டுத் திட்டம், ஒரு குறிப்பிட்ட தொகையை பரஸ்பர திட்டத்தில் மாதம் தோறும் அல்லது காலாண்டு தோறும் முதலீடு செய்யும் முறையாகும். எளிமையான முதலீட்டு முறை காரணமாக, பெரிய நகரங்களுடன் சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்தவர்கள் இப்போது பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்கிறார்கள்.

தற்போது சேமிப்பை விட முதலீட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் பலர் பணத்தை பன்மடங்காக்கி பயனடைந்துள்ளனர். எனினும், மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை முதலீடு (Investment Tips) செய்யும் பலர் சிறு சிறு தவறுகளைச் செய்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தத் தவறுகள் என்ன, அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் பெரிய இழப்புகளை எவ்வாறு தவிர்க்க முடியும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

1. நிதி இலக்குகளை நிர்ணயிக்காமல் முதலீடு செய்தல்

உங்கள் முதலீடுகள் எப்போதும் குறிப்பிட்ட நிதி இலக்குகளுடன் செய்யப்பட வேண்டும். இந்த இலக்குகளில் உங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம், வீடு வாங்குதல், வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லுதல் அல்லது ஓய்வு பெற திட்டமிடுதல் ஆகியவை அடங்கும். உங்களிடம் ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் இருந்தது என்றால் அதற்கு ஏற்ப உங்கள் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துவது எளிதாக இருக்கும்

2. நிதி இலக்குகளுக்குப் பதிலாக வருமானத்தில் கவனம் செலுத்துதல்

பலர் நிதி இலக்குகளை விட அதிக வருமானத்தை மனதில் கொண்டு முதலீடு செய்கிறார்கள். இதனால், பின்னாளில் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும். அதிக வருமானத்தை முதலீட்டுக்கான அளவுகோலாகக் கொள்ளாதீர்கள். பம்பர் ரிட்டர்ன்களைக் கொடுத்த பரஸ்பர நிதியம், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வருமானத்தைத் தராமல் போகலாம். எனவே, உங்கள் இலக்குக்கு ஏற்ப முதலீடு செய்யுங்கள்.

மேலும் படிக்க | குறைந்த செலவில் கோவா டூர் போகலாம்.. ஐஆர்சிடிசி அசத்தல் டூர் பேக்கேஜ்

3. மியூச்சுவல் ஃபண்டுகளில் வர்த்தகம்

பலர் நீண்ட காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யாமல் வழக்கமான லாபத்தை பதிவு செய்ய முயற்சி செய்கிறார்கள், இதற்காக அவர்கள் தங்கள் யூனிட்களை மீண்டும் மீண்டும் வாங்கி விற்கிறார்கள். இது சில காலத்திற்கு பலனைத் தந்தாலும் நீண்ட காலத்திற்கு நஷ்டம்தான் ஏற்படும்.

4. SIP முதலீட்டை பாதியில் நிறுத்துவது

சந்தை வீழ்ச்சியடையும் போது பல முதலீட்டாளர்கள் பீதி அடைந்து முதலீடு செய்வதை நிறுத்தி விடுவார்கள். அல்லது பயந்து முதலீட்டை திரும்பப் பெற முயற்சிப்பார்கள். அவர்களின் தற்போதைய முறையான முதலீட்டுத் திட்டங்களை (SIPs) இடையில் நிறுத்துவது தவறும். சந்தை ஏற்றமானதாக இருந்தாலும் சரி அல்லது ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சரி, SIP முதலீட்டை தொடர்ந்து கொண்டே இருங்கள்.

5. பல்வகைப்படுத்துதல் 

முதலீடு செய்யும் போது, ​​போர்ட்ஃபோலியோவில் பங்கு, கடன் மற்றும் தங்கம் போன்ற பல்வேறு விதமாக முதலீடு இருக்க வேண்டும். ஒரே இடத்தில் அனைத்தையும் முதலீடு செய்யக் கூடாது. முதலீடு செய்யும் போது பன்முகப்படுத்தல் கொள்கையை நீங்கள் பின்பற்றினால், நிச்சயமாக உங்கள் வருமானத்தை அதிகரிக்கலாம். இருப்பினும், பல முதலீட்டாளர்கள் பல்வகைப்படுத்தலில் கவனம் செலுத்துவதில்லை மற்றும் இறுதியில் இழப்புகளைச் சந்திக்கின்றனர்.

மேலும் படிக்க | PPF முதலீடு: தினம் ரூ.100 சேமித்தால் போதும்... எளிதில் லட்சாதிபதி ஆகலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News