Diabetes Control Tips: எகிறும் சுகர் லெவலை கட்டுப்படுத்தும் ‘சூப்பர்’ ஜூஸ்...!

Diabetes Control Tips: கோடை காலத்தில், சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் சர்க்கரை அளவை பராமரிக்கலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 22, 2024, 05:31 PM IST
  • நீரிழிவு நோயாளிகள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் பிரத்யேக கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.
  • சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் சர்க்கரை அளவை பராமரிக்கலாம்.
Diabetes Control Tips: எகிறும் சுகர் லெவலை கட்டுப்படுத்தும் ‘சூப்பர்’ ஜூஸ்...! title=

Diabetes Control Tips: கோடை காலத்தில், நீரிழிவு நோயாளிகள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் பிரத்யேக கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில் இந்த பருவத்தில் சிறிதளவு கவனக்குறைவு கூட உங்கள் சர்க்கரை அளவை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லக் கூடும். இருப்பினும், கோடை காலத்தில், சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் சர்க்கரை அளவை பராமரிக்கலாம். அந்த வகையில் சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவும் ஒரு சூப்பர் ஜூஸை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இதற்கு உங்களுக்கு தக்காளி மற்றும் சுரைக்காய் ஜூஸ் உதவும். இந்த சாற்றை குடித்தால் உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் (Diabetes Control Tips) ஒரு வாழ்க்கை முறை சார்ந்த நோய் என்பதால், உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் செய்வதன் மூலம் எளிதாகக் கட்டுப்படுத்தலாம். அந்த வகையில், சுரைக்காய் மற்றும் தக்காளி சாறு உங்களுக்கு பெரிதும் உதவும்.

சுரைக்காய் மற்றும் தக்காளி சாறு

தக்காளியில் உள்ள நரிங்கின் ஃபிளாவனாய்டுகள் நீரிழிவு எதிர்ப்பு மருந்தாக செயல்படுகின்றன. எனவே, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இது தவிர, தக்காளியின் ஜிஐ என்னும் கிளைசிமிக் குறியீட்டு அளவும் குறைவாக உள்ளது. எனவே இது இரத்த சர்க்கரை திடீரென அதிகரிக்காமல் நிர்வகிக்க உதவுகிறது. அதேசமயம் சுரைக்காயில் 92 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. தவிர, இதில் உள்ள நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்துகிறது. இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும் சுரைக்காயில் குளுக்கோஸ் முற்றிலும் இல்லை.

மேலும் படிக்க | Summer Tips: கடும் கோடையிலும் உடலை கூலாக வைத்திருக்க... சில சூப்பர் உணவுகள்!

தக்காளி-பூசணி சாறு குடிப்பதால் ஏற்படும் மற்ற நன்மைகள்

1. தக்காளி மற்றும் சுரக்காய் சாறு கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் இந்த சாற்றை தொடர்ந்து உட்கொள்ளலாம்.

2. இந்த ஜூஸ், செரிமான அமைப்பை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இதனால், மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை, வாயு போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

3. தக்காளி - சுரைக்காய் சாற்றில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதனால் நோய்கள் அண்டாமல் இருக்கும்

4. தக்காளி - சுரைக்காய் ஜூஸ் சாப்ப்பிடுவதன் மூலம் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கலாம். இதனால், முதுமை நன்ம்மை அண்டாமல் நீண்ட காலத்திற்கு இளமையுடன் இருக்கலாம்.

5. அதிகரித்து வரும் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், இந்த ஜூஸை மிஸ் பண்ணாமல் குடியுங்கள். இதனால், உடல் எடை கட்டுக்குள் இருக்கும். கொழுப்பை எரித்து உடல் எடையை கட்டுப்படுத்தும் திறன் இதற்கு உண்டு. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சவால் விடும் சுகர் லெவலை சுலபமாக குறைக்க இந்த இலைகளை சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News