கூந்தல் வேகமா வளர அரிசி தண்ணீர் ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க

Rice Water Hair Mask: அரிசியை முடியில் பல வழிகளில் பயன்படுத்தலாம். அரிசி நீரால் ஹேர் மாஸ்க் செய்து முடியில் தடவுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 4, 2023, 01:31 PM IST
  • அரிசி தண்ணீர் ஹேர் மாஸ்க்.
  • அரிசி ஊறவைத்த நீர் தலைமுடி வளர உதவுமா?
  • ​தலைமுடிக்கு அரிசி தண்ணீர் எப்படி பயன்படுத்துவது.
கூந்தல் வேகமா வளர அரிசி தண்ணீர் ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க title=

கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்: அரிசி நீரை முடியில் பல வழிகளில் தடவலாம். இந்த தண்ணீருக்கு ஒன்றல்ல, பல நன்மைகள் உள்ளன, இவை முடி வளர்ச்சிக்கு பெருமளவு உதவுகிறது. இந்த நீர் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது, மேலும் முடியை பளபளப்பாக்குகிறது மற்றும் இந்த நீர் முடியை மென்மையாக்கவும் உதவுகிறது. எனவே கூந்தலில் அரிசி நீரை எந்தெந்த வழிகளில் தடவலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அரிசி தண்ணீர் ஹேர் மாஸ்க் | Rice Water Hair Mask

அரிசி தண்ணீரில் ஹேர் மாஸ்க்  (Rice Water) செய்ய, முதலில் அரிசியை நன்கு கழுவவும். அதன் பிறகு, அரிசியை தண்ணீரில் ஊறவைத்து, தனி பாத்திரத்தில் வைக்கவும். இந்த தண்ணீரை அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பிறகு, தலைமுடியில் தடவ அரிசி தண்ணீர் தயாராக உள்ளது. அதை சல்லடை போட்டு தண்ணீரை தனியாக வைக்கவும்.

மேலும் படிக்க | உடல் எடை சட்டுனு குறைய... தூங்க செல்லும் முன் இந்த 8 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

அரிசி தண்ணீரை தலைமுடியில் அரை மணி நேரம் தடவி வைத்திருக்கலாம். இந்த தண்ணீரை ஷாம்பு (Shampoo) போடுவதற்கு முன் தலையை கழுவ பயன்படுத்தலாம். ஷாம்பு செய்த பிறகு மூட, அரிசி தண்ணீரை கண்டிஷனராக தலைமுடியில் பயன்படுத்தலாம். 

அரிசி நீர் என்பது அரிசியை ஊறவைத்த பிறகு அல்லது வேகவைத்த பிறகு அந்த ஸ்டார்ச் முழுக்க இறங்கி, நமக்குக் கிடைக்கும் மாவுச்சத்து கொண்ட நீர் தான் அரிசி தண்ணீர்.

இந்த அரிசி தண்ணீரில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக,

அமினோ அமிலங்கள்

பி வைட்டமின்கள்
வைட்டமின் ஈ
கனிமங்கள்
ஆக்ஸிஜனேற்றிகள்
ஆகியவை அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.

அரிசி தண்ணீர் மற்றும் யாவ் பெண்கள்
Huangluo Village என்பது சீனாவில் உள்ள ஒரு கிராமமாகும் (Huangluo Village), அங்கு பெண்கள் தங்கள் தலைமுடிக்கு உலகம் முழுவதும் பிரபலமானார்கள். இந்த கிராமத்தில் யாவ் பெண்கள் (Yao Women) வசிக்கின்றனர். இந்தப் பெண்களின் தலைமுடி பாதம் வரை நீளமாக இருக்கும்.

இங்குள்ள பெண்களின் நீண்ட கூந்தல் காரணமாக ஹுவாங்லுவோ கிராமத்தின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர் பெண்கள் அரிசி நீரால் தலையை கழுவுவார்கள். இந்தப் பெண்களின் தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இந்தப் பெண்கள் வடித்த (Fermented Rice Water) அரிசி நீரை தலைமுடியில் தடவுவார்கள்.

இந்த பெண்களை போல முடி போஷன் தயாரிக்க, உங்களுக்கு வெள்ளை அரிசி, பொமலோ தோல்கள், தேயிலை தவிடு மற்றும் தண்ணீர் தேவைப்படும். ஒரு கப் அரிசியை 2 கப் தண்ணீரில் கலக்கவும். அரை மணி நேரம் வைத்திருந்த பிறகு, அரிசியை மசித்து வடிகட்டி, தண்ணீரைப் பிரிக்கவும். அதில் பொமலோ அல்லது வேறு ஏதேனும் சிட்ரஸ் பழங்களின் தோல்களை போட்டு, பிறகு 3 ஸ்பூன் தேயிலை தவிடு சேர்க்கவும். இந்த தண்ணீரை 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். ஏதேனும் கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த தண்ணீரை தலைமுடியைக் கழுவவோ அல்லது ஹேர் மாஸ்க் போல தலைமுடியில் தடவவோ (Rice Water Hair Mask) பயன்படுத்தலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இந்த ஜூஸ் குடிச்சா போதும்.. சூப்பரா குறைக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News