அதிகபட்ச வெப்பத்தை அனுபவிக்கும் நாட்டின் மிகவும் வெப்பமான நகரங்கள்...

அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு கடுமையான வெப்ப அலைகள் வடமேற்கு, மத்திய மற்றும் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளை பாதிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Last Updated : May 24, 2020, 08:19 AM IST
அதிகபட்ச வெப்பத்தை அனுபவிக்கும் நாட்டின் மிகவும் வெப்பமான நகரங்கள்... title=

அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு கடுமையான வெப்ப அலைகள் வடமேற்கு, மத்திய மற்றும் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளை பாதிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் மே 24 முதல் 27 வரை வெப்ப அலை அதிகபட்சமாக இருக்கும் எனவும், இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் வெப்ப அலை மற்றும் கடுமையான வெப்ப அலை; மற்றும் விதர்பாவில் வெப்ப அலை வீசும் எனவும் IMD எச்சரித்துள்ளது.

வெப்ப அலை என்பது நான்கு நாட்களுக்கு மேல் அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் கடுமையான வெப்ப அலையாக மாறும் எனவும், இப்பகுதியில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும் IMD தெளிவுப்படுத்துகிறது.

அந்த வகையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 40°C-ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை கூடுதலாக 4.5°C முதல் 6.4°C வரை இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையானது இயல்பை விட 4.5°C முதல் 6.4°C வரை அதிகமாக இருக்கும்போது அல்லது ஒரு துணைப்பிரிவில் இரண்டு நிலையங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 45°C-க்கு மேல் இருக்கும்போது தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வெப்ப அலை உருவாகும் என கருதப்படுகிறது.

சனிக்கிழமையன்று பதிவான வெப்பநிலை அடிப்படையில் நாட்டின் மிகவும் வெப்பமான நகரங்கள் இங்கே:

  • சுரு - 46.6°C
  • கங்கநகர் - 46.6°C
  • ஜான்சி - 46.1°C
  • ஆக்ரா - 46°C
  • கஜுராஹோ - 46°C
  • அகோலா - 46°C
  • நாக்பூர் - 46°C
  • குவாலியர் - 45.9°C
  • பாலம் - 45.6°C
  • டெல்லி (சப்தர்ஜங்) - 44.7°C
  • பிலாஸ்பூர் - 44.6°C
  • ராய்ப்பூர் - 44.4°C
  • மேடக் - 44°C
  • போபால் - 43.8°C
  • ஜெய்ப்பூர் - 43.6°C
  • ஹைதராபாத் - 42.8°C
  • சண்டிகர் - 41.4°C

Trending News