அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் இல்லை -மகாராஷ்டிர பாஜக!

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் இல்லை என்று பாஜக ஒப்புக்கொண்டதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சிவசேனா-பாஜக கூட்டணி நாடகம் முடிவுக்கு வந்தது.

Last Updated : Nov 11, 2019, 06:54 AM IST
அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் இல்லை -மகாராஷ்டிர பாஜக! title=

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் இல்லை என்று பாஜக ஒப்புக்கொண்டதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சிவசேனா-பாஜக கூட்டணி நாடகம் முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், "காலை முதல் நடைப்பெற்ற கட்சி மையக் குழுவின் பரபரப்பான கூட்டங்களுக்குப் பிறகு கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சி தனது கூட்டாளியான சிவசேனாவை முன்னோக்கி சென்று NCP மற்றும் காங்கிரஸின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்குமாறு கேட்டுக்கொண்டது என தெரிவித்துள்ளார்.

கட்சி காரிய கமிட்டி கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில்., "சிவசேனாவுடனான கூட்டணியுடன் ஆணை இருந்தபோதிலும், நாங்கள் அரசாங்கத்தை அமைக்க விரும்பவில்லை. சிவசேனா மக்கள் ஆணையை அவமதிக்க விரும்புகிறது. எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் மாநில ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம்" என குறிப்பிட்டுள்ளது.

மக்கள் ஆணையை சிவசேனா அவமதித்ததாக குற்றம் சாட்டிய பாட்டீல், மாநிலத்தில் அதன் நட்பு கட்சி, காங்கிரசுடன் கூட்டணியில் அரசாங்கத்தை அமைக்க விரும்பினால், அது அவர்களுடைய விருப்பம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் சிவசேனா-விற்கு தங்களுடைய ஆசீர்வாதம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக மகாராஷ்டிராவில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன, ஆனால் முதலமைச்சர் பதவி தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இரு கட்சிகளும் சிக்கிக்கொண்டன.

இதனையடுத்து பாஜக-வுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் இரண்டாவது பெரிய கட்சியாக விளங்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆதரவையும், காங்கிரஸின் வெளிப்புற ஆதரவையும் கொண்டு அரசாங்கத்தை அமைப்பதற்கான கூற்றைப் பெறும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திங்களன்று அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமைகோரலைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் அரசாங்கத்தை அமைக்க ஆளுநரின் அழைப்பு குறித்து விவாதிக்க பாஜகவின் முக்கிய குழு முந்தைய நாள் கூடியது.

இதற்கிடையில், உத்தவ், ஆதித்யா தாக்கரே மற்றும் பலர் உட்பட சேனா உயர் தலைவர்கள் வடமேற்கு மும்பையின் மலாட் நகரில் உள்ள மத் தீவின் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தற்போது பாதுகாப்பில் தங்கியுள்ள தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புகளை நடத்தினர். இதேபோல், மத்திய மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஒரு பாதுகாப்பான இடத்தில் முறைசாரா ஆலோசனை நடத்தினர். தேசியவாத காங்கிரஸ் கட்சியும் செவ்வாயன்று மும்பையில் தனது அனைத்து MLA-க்களுடன் ஒரு சந்திப்பை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான விருப்பத்தையும் திறன்களையும் வெளிப்படுத்த சனிக்கிழமை பிற்பகல் மாநில ஆளுநர் பாஜக-வுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆளுநரின் அழைப்பை அடுத்து மாநிலத்தில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது...

Trending News