திருமணம் செய்ய வற்புறுத்திய காதலிக்கு விஷம் கொடுத்த காதலன்!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை, விஷம் வைத்து கொலை செய்ய முயற்சித்த காதலனின் சூழ்ச்சி தோல்வியில் முடிந்தது.

Last Updated : Jan 29, 2020, 04:23 PM IST
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலிக்கு விஷம் கொடுத்த காதலன்! title=

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை, விஷம் வைத்து கொலை செய்ய முயற்சித்த காதலனின் சூழ்ச்சி தோல்வியில் முடிந்தது.

உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து காவல்துறை ஆணையர் அசோக் குமார் தெரிவிக்கையில்., "புதுடெல்லி இந்திரபுரி பகுதியை சேர்ந்த சிவப்பிரசாத் மிஷ்ராவின் மகன் தீனதயால் மிஷ்ரா மற்றும் புதுடெல்லி பாசம்பூரி பகுதியை சேர்ந்த சுஹத்கான் ஆகியோர் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளனர். இந்த விளம்பர திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் காதல் வலையில் சிக்கியுள்ளனர், இருவருக்கும் இடையேயான காதல் உறவு பலமாக வளர்ந்துள்ளது.

இதனையடுத்து இருவரும் தனித்து வாழ முடிவு செய்து உத்திர பிரதேச மாநிலம் மதுராவில் தனி வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்துள்ளனர். மேலும் தாங்கள் இருவரும் கணவன் மனைவி என சுற்றத்தாரை நம்பவைத்துள்ளனர். 

இருவரும் இதுவரை திருமணம் செய்யாத நிலையில்., காதலி திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். மேலும் திருமணம் நிகழாமல் தனித்து வாழவும் தடை விதிக்க துவங்கியுள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த காதலன் காதலியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதற்கான சூழ்ச்சி திட்டம் ஒன்றினை தீட்டி, அதனை செயல்படுத்துவம் முடிவு செய்தார். 

அதன்படி காதலியின் தேனிரீல் விசம் கலந்து அவருக்கு கொடுத்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார். எனினும் விசத்தின் அளவு தேனீரில் குறைவாக இருந்திட அவர் அதிர்ஷ்டவசமாக மயக்கத்துடன் தப்பினார். 

முன்னதாக ஆள் நடமாட்டம் குறைவாக காணப்பட்ட காதல் ஜோடியில் மர்மம் நிலவுவதினை கண்ட அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காதலியின் உயிரை மீட்டனர். காவல்துறை தகவல்கள் படி காவல்துறையினர் வீட்டை அடைந்தபோது காதலி மயக்கமான நிலையில் குளியல் அறையில் கிடந்ததாக கூறப்படுகிறது.

Trending News