சோதனையில் சிக்கிய ரூ.1.62 கோடி... கட்டுக்கட்டாக ரூ. 2000 நோட்டுகள் - அமலாக்கத்துறை அதிரடி

அமலாக்கத்துறையால் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கும், அவருக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் அதாவது மூன்று மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.62 கோடி ரொக்கமாகவும், பல ஆவணங்களும் சிக்கியுள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Jun 21, 2023, 02:52 PM IST
  • சுரேஷ் ஜகுபாய் படேல் மற்றும் அவரது கூட்டாளிகளின் வீட்டில் சோதனை.
  • குஜராத், மகாராஷ்டிரா மற்றும் டாமன் ஆகிய இடங்களில் சோதனை.
  • இவர்கள் மீது 35 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சோதனையில் சிக்கிய ரூ.1.62 கோடி... கட்டுக்கட்டாக ரூ. 2000 நோட்டுகள் - அமலாக்கத்துறை அதிரடி title=

குஜராத், மகாராஷ்டிரா மற்றும் டாமன் ஆகிய மாநிலங்களில் மிரட்டி பணம் பறித்தல், கொலை செய்தல் மற்றும் மதுபானம் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிரான சோதனையைத் தொடர்ந்து,  ரூ. 1.62 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவை 2 ஆயிர ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை இன்று தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை அறிக்கை

சுரேஷ் ஜகுபாய் படேல் மற்றும் அவரது கூட்டாளிகளின் ஒன்பது குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள், சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் நேற்று முன்தின் (ஜூன் 19) டாமன் மற்றும் குஜராத்தின் வல்சாத் பகுதியில் சோதனை செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுரேஷ் ஜகுபாய் படேல் மற்றும் அவரது கூட்டாளிகள் கேதன் படேல், விபுல் படேல் மற்றும் மிதன் படேல் உள்ளிட்டோர் 2018ஆம் ஆண்டு டாமனில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக நீதிமன்றக் காவலில் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

35 முதல் தகவல் அறிக்கைகள்

ஊழல், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்தல், கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், மது கடத்தல், கொள்ளை, அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல், பாஸ்போர்ட் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டாமன், குஜராத் மற்றும் மும்பையில் படேல் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக 35க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் மூலம் இந்த பணமோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சிறந்த விமான நிறுவனத்துக்கான விருதை 3வது ஆண்டாக தட்டிச் செல்லும் விஸ்தாரா!

இந்த சோதனையில் ரூ. 1 கோடிக்கு மேல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், 100-க்கும் மேற்பட்ட சொத்துகள் தொடர்பான ஆவணங்கள், நிறுவனங்கள், கம்பெனிகள், 3 வங்கி லாக்கர் தவிர பணப் பரிவர்த்தனைகள் பற்றிய ஆவணங்கள் உட்பட ரூ.1.62 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது, ஆனால் அத்தகைய நோட்டுகளை கணக்குகளில் டெபாசிட் செய்யவோ அல்லது வங்கிகளில் மாற்றவோ செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அவகாசம் அளித்தது. 

அமலாக்கத்துறையால் குற்றஞ்சாட்டப்பட்டவர், நிறுவனங்களின் நெட்வார்கை உருவாக்கினார், அதில் பெரும்பாலனவற்றில் எவ்வித வணிகமும் இல்லை, சிலவற்றில் மட்டும் பெயருக்கு வணிகம் நடைபெறுகிறது. தங்கள் குற்றச் செயல்களில் இருந்து பெறப்பட்ட முறைகேடாகச் சம்பாதித்த பணத்தைச் சட்டப்பூர்வமாக்கும் ஒரே நோக்கத்துடன் அவை உருவாக்கப்பட்டன. 

யார் இந்த சுரேஷ் படேல்?

சுரேஷ் படேல், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள், "ரூ. 100 கோடிக்கு மேல் ரொக்கமாக வரவு வைக்கப்பட்டுள்ளன" என்று மத்திய புலனாய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. சுரேஷ் படேல் குஜராத்தில் 10க்கும் மேற்பட்ட மதுக்கடத்தல் வழக்குகள், ஏழு போலி மற்றும் மோசடி வழக்குகள், எட்டு கொலை அல்லது கொலை முயற்சி வழக்குகள், ஐந்து சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 174-A கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கும் உள்ளது என அமலாக்கத்துறை தெரிவிக்கிறது. 

மேலும் படிக்க | 5 ஸ்டார் ஹோட்டலில் இலவசமாக தங்கிய நபர்... அதுவும் 2 வருடம் - எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News