4000 மரங்களை வெட்ட உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த ரயில்வே துறை...

ரயில் பாதை அமைப்பதற்காக சுமார் நான்காயிரம் மரங்களை வெட்ட உச்சநீதிமன்றத்தில் ரயில்வே மேம்பாட்டு கழகம் விண்ணப்பித்துள்ளது!

Last Updated : Dec 4, 2019, 04:16 PM IST
  • உத்தரபிரதேச மாநிலத்திற்கு உட்பட்ட மதுராவிற்கும் ஜான்சிக்கும் இடையில் ரயில் பாதை அமைப்பதற்காக சுமார் நான்காயிரம் மரங்களை வெட்ட அனுமதி கோரி ரயில்வே மேம்பாட்டுக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது.
  • இந்த விவகாரத்தை நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன தீர்மானிக்கிறது என்பதை எதிர்பார்த்து சமூக ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.
4000 மரங்களை வெட்ட உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த ரயில்வே துறை... title=

ரயில் பாதை அமைப்பதற்காக சுமார் நான்காயிரம் மரங்களை வெட்ட உச்சநீதிமன்றத்தில் ரயில்வே மேம்பாட்டு கழகம் விண்ணப்பித்துள்ளது!

உத்தரபிரதேச மாநிலத்திற்கு உட்பட்ட மதுராவிற்கும் ஜான்சிக்கும் இடையில் ரயில் பாதை அமைப்பதற்காக சுமார் நான்காயிரம் மரங்களை வெட்ட அனுமதி கோரி ரயில்வே மேம்பாட்டுக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தை நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன தீர்மானிக்கிறது என்பதை எதிர்பார்த்து சமூக ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.

செவ்வாயன்று, ரயில் மேம்பாட்டுக் கழகம், இந்த வழக்கை தலைமை நீதிபதி பெஞ்ச் முன் குறிப்பிடுகையில், முன்கூட்டியே விசாரணை நடத்தக் கோரியது. புதன்கிழமை விசாரிக்கப்பட வேண்டிய விஷயத்திற்கு ஒப்புதல் அளித்தபோது, ​​தலைமை நீதிபதி, "நீங்கள் ஏன் பல மரங்களை வெட்ட விரும்புகிறீர்கள்? குறைவான மரங்களை வெட்ட வேண்டிய மாற்று வழி உங்களிடம் உள்ளதா?" என கேள்வி எழுப்பியது.

தாஜ் பாதுகாக்கப்பட்ட பகுதி (TTZ) மண்டலத்தில், மதுரா முதல் ஜான்சி வரை ரயில் பாதை அமைப்பதற்காக சுமார் 80 கி.மீ பரப்பளவில் 40102 மரங்களை வெட்ட ரயில் விகாஸ் நிகாம் அனுமதி கோரியுள்ளது. தாஜ் பாதுகாக்கப்பட்ட பகுதியில் மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ரயில்வே உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்து அனுமதி கேட்க வேண்டியிருந்தது. அந்த வகையில் குறித்து இந்த பகுதியில் எந்தவொரு திட்டத்துக்காகவோ அல்லது ஏதேனும் தேவைக்காகவோ ஒரு மரத்தை வெட்ட வேண்டுமானால், முதலில் உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டுதல் அவசியம் ஆகும். இந்த விதியின் கீழ் தற்போது ரயில்வே மேம்பாட்டு கழகம் விண்ணப்பித்துள்ளது.

Trending News