வருமான வரி கட்டாத அமைப்புசாரா தொழிலாளிகளுக்கான அரசு ஓய்வூதியத் திட்டம்! அடல் பென்ஷன்!

APY Best pension Plan : உத்தரவாத ஓய்வூதியத் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா, வருமான வரி கட்டாத, அமைப்புசாராத் தொழிலாளிகளுக்கான அருமையான திட்டம்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 29, 2024, 12:32 PM IST
  • உத்தரவாத ஓய்வூதியத் திட்டம்
  • அடல் பென்ஷன் யோஜனா சிறப்பம்சங்கள்
  • வருமான வரி கட்டாத தொழிலாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்
வருமான வரி கட்டாத அமைப்புசாரா தொழிலாளிகளுக்கான அரசு ஓய்வூதியத் திட்டம்! அடல் பென்ஷன்! title=

அடல் பென்ஷன் யோஜனா (APY) 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் அவர்களின் ஓய்வுகாலத்தில் வருமான பாதுகாப்பை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது. உத்தரவாத ஓய்வூதியத் திட்டமான இது ,அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த மக்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்டது.  தற்போது அடல் பென்ஷன் யோஜனாவில் 5.3 கோடிக்கும் அதிகமான பங்குதாரர்கள் உள்ளனர். அதாவது 5.3 கோடி பேர் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, கவலையில்லாத ஓய்வுக்காலத்தை அனுபவிக்க மக்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. 
வயது முதிர்வு காலம்வரை அரசுத்துறையில் பணிபுரிந்து பணிநிறைவு செய்த ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைப்பதால், அரசு ஊழியர்களுக்கு வயதான காலத்தில் வருமானம் உறுதியாகிறது. ஆனால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பாதுகாப்பு இல்லை என்பதால், இந்த திட்டத்தை அரசு செயல்படுத்திவருகிறது.  

சிறுவயதிலிருந்தே சேமிப்பை ஊக்குவிப்பது மற்றும், எதிர்காலத்திற்காக திட்டமிட மக்களை ஊக்குவிக்கும் திட்டம் இது. ஒரு தனிநபர் பெற விரும்பும் ஓய்வூதியத்தின் அளவு என்பது அவர்களின் மாதாந்திர பங்களிப்பு மற்றும் அவர்களின் வயதைப் பொறுத்தது என்பதால், இளம் வயதிலேயே இந்தத் திட்டத்தில் இணைவது நல்ல பலனைத் தரும்.

மேலும் படிக்க | Income Tax Saving: NPS முதலீடு அளிக்கும் சூப்பர் நன்மை, வரி விலக்கில் இரட்டிப்பு பலன்

அடல் பென்ஷன் யோஜனாவின் (APY) பயனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் என்பது, அவர்களின் கணக்கில் சேர்ந்திருக்கும் நிதியின் அளவைப் பொறுத்தது. அடல் பென்ஷன் திட்டப் பயனாளி இறந்துவிட்டால், அவரது வாழ்க்கைத்துணை (கணவன்/மனைவி) ஓய்வூதிய பலன்களை தொடர்ந்து பெறலாம். இருவரும் இறந்துவிட்டால், பயனாளியின் நாமினியான நியமனதாரர், கார்ப்பஸ் தொகையை மொத்தமாகப் பெற்றுக் கொள்ளலாம். 

உத்தரவாத ஓய்வூதியம்
அடல் பென்ஷன் ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகள் ஓய்வூதியமாக ரூ. 1000, ரூ. 2000, ரூ. 3000, ரூ. 4000 அல்லது ரூ. 5000 வரை ஓய்வூதியம் பெறலாம், அவர்களின் ஓய்வூதியத் தொகையானது, மாதாந்திர பங்களிப்புகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

திட்டத்தில் சேர வயது வரம்பு
அடல் பென்ஷன் ஓய்வூதியத் திட்டத்தில் சேருபவர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், 40 வயதுக்கு குறைவானவராகவும் இருக்க வேண்டும். எனவே, மாணவர்கள்கூட இந்தத் திட்டத்தில் இணைந்து தங்கள் வயதான காலத்திற்கான ஓய்வூதியத்தை திட்டமிடலாம். இந்தத் திட்டத்திற்கான பங்களிப்புகள் குறைந்தது 20 ஆண்டுகளுக்குச் செய்யப்பட வேண்டும் என்பது திட்டத்தின் முக்கியமான விதிமுறையாகும்.

மேலும் படிக்க | Old Tax Regime Vs New Tax Regime: NPS-க்கான வரி விலக்கை கோருவது எப்படி

திட்டத்தில் இருந்து வெளியேறுவது  
திட்டப் பயனாளி 60 வயதை எட்டும்போது, மாதாந்திர ஓய்வூதியம் தொடங்கும். ஆனால், 60 வயதுக்கு முன்னரே  நோய் அல்லது மரணம் போன்ற சூழ்நிலைகளில் மட்டுமே 60 வயதிற்கு முன்னதாக இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறலாம்.

அடல் ஓய்வூதிய திட்டப் பயனாளி இறந்துவிட்டால், அவரது வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியம் பெற உரிமை உண்டு.  வாழ்க்கைத் துணை, திட்டத்திலிருந்து வெளியேறவோ அல்லது ஓய்வூதியப் பலன்களைத் தொடர்ந்து பெறவோ விருப்பம் உள்ளது.

தனிநபர்கள் 60 வயதை அடையும் முன் திட்டத்திலிருந்து வெளியேறத் தேர்வுசெய்தால், அவர்களின் ஒட்டுமொத்த பங்களிப்புகள் மற்றும் அதில் ஈட்டப்பட்ட வட்டி மட்டுமே திருப்பிக் கிடைக்கும்.

மேலும் படிக்க | குண்டர்-அரசியல்வாதி முக்தார் அன்சாரியின் மரணம் நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News