LPG முதல் கிரெடிட் கார்டு வரை... 2023 ஜூலை முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்!

ஜூலை தொடக்கத்தில், உங்களை பாதிக்கும் அல்லது தாக்கத்தை ஏற்படுத்து வகையில் பல விஷயங்கள் மாற வாய்ப்புள்ளது. இந்த விஷயங்களின் நேரடி பாதிப்பை உங்கள் செலவுகளில் காணலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 26, 2023, 08:46 PM IST
LPG முதல் கிரெடிட் கார்டு வரை... 2023  ஜூலை முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்! title=

ஜூலை 2023 முதல் ஏற்பட உள்ள முக்கிய மாற்றங்கள்: ஜூன் மாதம் முடிவடைய உள்ளது, மூன்று நாட்களுக்குப் பிறகு அது ஜூலை மாதம் பிறக்க உள்ளது. ஜூலை தொடக்கத்தில், உங்களை பாதிக்கும் அல்லது தாக்கத்தை ஏற்படுத்து வகையில் பல விஷயங்கள் மாற வாய்ப்புள்ளது. இந்த விஷயங்களின் நேரடி பாதிப்பை உங்கள் செலவுகளில் காணலாம். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியுடன், இந்த முறையும் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த மாற்றங்களை நீங்கள் அறிந்திருக்ந்திருக்க வேண்டியது முக்கியம். இந்த மாற்றங்களில் எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் சிஎன்ஜி-பிஎன்ஜி விலைகள் ஆகியவை அடங்கும். ஜூலை 1 முதல் மாற்றங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்

எல்பிஜி சிலிண்டர் விலைகள்

எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றுகின்றன. வணிக சிலிண்டர்களின் விலை ஏப்ரல், மே மற்றும் ஜூன் முதல் தேதியில் குறைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. இம்முறை வணிக ரீதியாக 14 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு விதிமுறைகள்

வெளிநாட்டில் கிரெடிட் கார்டு செலவுகளுக்கு ஜூலை 1, 2023 முதல் டிசிஎஸ் கட்டணத்தை விதிக்கும் விதிமுறை நடைமுறை படுத்தப்படலாம். இதன் கீழ், வெளிநாடுகளில் செய்யும் செலவு 7 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால், நீங்கள் 20 சதவீத டிசிஎஸ் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான செலவினங்களுக்கு 5 சதவீதமாக குறைக்கப்படும். வெளிநாட்டில் கல்விக்காக கடன் பெற்றவர்கள், 7 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு 0.5 சதவீத டிசிஎஸ் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். எனினும், இந்த தொகையை வருமான வரி தாக்கல் செய்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஜூலை மாதம் விடுமுறை பட்டியல்: அடுத்த மாதத்தில் 15 நாள் வங்கிகள் இயங்காது

CNG-PNG விலைகள்

சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலையில் மாற்றங்கள் மாதத்தின் 1 ஆம் தேதி அல்லது எல்பிஜி போன்ற முதல் வாரத்தில் காணப்படுகின்றன. டெல்லி, மும்பை மற்றும் பிற நகரங்களில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், மாதத்தின் முதல் வாரத்திலேயே சிஎன்ஜி-பிஎன்ஜி விகிதத்தை மாற்றுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் ஜூலை மாதத்தில் விலையில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 30க்குள் ஆதாருடன் பான் இணைக்கப்பட வேண்டும்

பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆகும். தற்போது வரை பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்காதவர்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ரூ.1000 செலுத்தி இணைந்துக் கொள்ளலாம். ஜூன் 30க்குள் ஆதாருடன் பான் இணைக்கப்படாவிட்டால், பான் எண் செயலிழந்துவிடும். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

வங்கி விடுமுறை நாட்கள்

 இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலில், ஜூலை 2023ல் வங்கிகள் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஜூலை 29ம் தேதி முஹரம் அன்று வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின்படி, மாநிலத்திற்கு ஏற்றபடி வெவ்வேறு பண்டிகை, திருவிழா என எட்டு விடுமுறைகள் அடங்கும்.

மேலும் படிக்க | இந்த ரகசியங்களை வங்கிகள் ஒருபோதும் நம்மிடம் சொல்ல மாட்டார்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News