கொழு கொழு தொப்பை குறைய வேண்டுமா? இந்த ஜூஸை குடித்தால் போதும்

Weight loss tips : உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகள் செய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் உடல் எடை குறைந்து விடும் என்று கூறப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 29, 2024, 05:57 PM IST
  • சுரைக்காய் சாற்றின் பண்புகள் என்னென்ன?
  • சுரைக்காய் சாறு உடல் எடையை குறைக்க உதவுமா?
  • சுரைக்காய் சாறு குடிக்க சிறந்த நேரம் எது?
கொழு கொழு தொப்பை குறைய வேண்டுமா? இந்த ஜூஸை குடித்தால் போதும் title=

Bottle guard juice benefits : ஆரோக்கியமற்ற கொழுப்பு நோய்களின் வீடாகும். இது சரியான நேரத்தில் குறைக்கவில்லை என்றால், நீங்கள் இரத்த சர்க்கரை, கொழுப்பு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு பலியாகலாம். இதுவே மக்கள் உடற்தகுதி பற்றி மிகவும் விழிப்புடன் இருப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். இதனால் உடல் எடை அதிகரித்தவுடன் ஜிம் மற்றும் யோகா செய்ய மக்கள் ஆரம்பித்து விடுவார்கள். அதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்த முடியும். இதுமட்டுமின்றி, பல்வேறு வகையான உணவு முறைகளையும் பின்பற்றுகிறார்கள், குறிப்பாக விரைவான எடை இழப்புக்கு சுரைக்காய் சாறு மிகவும் பிரபலமானது. எனவே இன்று இந்த கட்டுரையில் நாம் இதைப் பற்றி தான் காணப் போகிறோம். சுரைக்காய் ஜூஸின் பண்புகளைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் நீங்களும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை பராமரிக்கலாம்.

சுரைக்காய் சாற்றின் பண்புகள் என்னென்ன?
சுரைக்காயில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது, அதாவது இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும். இது தவிர, சுரைக்காயில் கலோரிகள் குறைவு. எனவே தயக்கமின்றி உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அருந்தலாம். ஏனெனில் இதில் 96% தண்ணீர் உள்ளது. இது தவிர, நார்ச்சத்து, வைட்டமின்கள் (குறிப்பாக பி காம்ப்ளக்ஸ் மற்றும் சி), பொட்டாசியம், இரும்பு மற்றும் சோடியம் ஆகியவை ஏராளமாக நிறைந்துள்ளது.

மேலும் படிக்க | எகிறும் உடல் எடையை பட்டுனு குறைக்க உதவும் பச்சை உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க

சுரைக்காய் சாறு குடிக்க சிறந்த நேரம் எது?
உடல் எடை குறைய வேண்டுமானால் காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் சாறு குடிக்கலாம். மேலும் இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவும். அதே நேரத்தில், சுரைக்காய் சாறு ரெடி செய்யும் போது, ​​​​அதை வடிகட்டவே கூடாது, ஏனெனில் அதில் இருக்கும் நார்ச்சத்து நீக்கப்படும், இது கொழுப்பைக் குறைக்க அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.

சுரைக்காய் சாறு உடல் எடையை குறைக்க உதவுமா?
இந்நிலையில் இப்போது உண்மையில் உடல் எடை குறைக்க சுரைக்காய் உதவுமா என்றால், இந்த ஜூஸை குடிப்பதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகள் அனைத்தும் கரைந்துவிடும், எனினும் விரைவான எடை இழப்புக்கு தினசரி உடற்பயிற்சி மிகவும் அவசியமாகும்.

சுரைக்காய் சாற்றின் மற்ற நன்மைகள்
சுரைக்காய் சாறு உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, உங்கள் கூந்தலை கருப்பாகவும், பளபளப்பாகவும் மாற்றவும் உதவும். அதுமட்டுமின்றி இந்த ஜூஸ் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவும்.

வயிற்று கொழுப்பைக் குறைக்க சுரைக்காய் சாறு உட்கொள்வது நல்லது. இதற்கு ஒரு சுரைக்காயை எடுத்து தோலுரித்து நன்கு கழுவிக்கொள்ளவும். இப்போது அதன் சாறு எடுத்து உட்கொள்ளுங்கள். இதை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிப்பதால் அதிக நன்மை கிடைக்கும். சுரைக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. ஆகையால், இது நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதன் காரணமாக உடல் ஆற்றலுடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்கின்றது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க வீட்டிலேயே இப்படி பண்ணுங்க போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News