பயணிகள் கவனத்திற்கு... ரிசர்வேஷன் இல்லாத ரயிலையும் இனி ஈஸியாக புக் செய்யலாம்!

Indian Railways Update: முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை தற்போது புக்கிங் செய்ய புது யுடிஎஸ் செயலி ஒன்றை ரயில்வே கொண்டுவந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 17, 2023, 05:20 PM IST
  • இந்த செயலியில் எளிதாக டிக்கெட் புக் செய்ய முடியும்.
  • R-Wallet என்ற கட்டண சேமிப்பு கணக்கு உள்ளது.
  • இதனை ரீ-சார்ஜ் செய்து சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பயணிகள் கவனத்திற்கு... ரிசர்வேஷன் இல்லாத ரயிலையும் இனி ஈஸியாக புக் செய்யலாம்! title=

Indian Railways Update: ரயில்வே பயணிகளுக்கு இதோ ஒரு நற்செய்தி வந்துள்ளது. இனி ரயில்களில் முன்பதிவு இல்லாத  டிக்கெட்டுகளை பயணிகள் அவர்கள் தொலைபேசி மூலமே முன்பதிவு செய்யும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்மூலம், அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு செய்யப்படாத, நடைமேடை மற்றும் சீசன் டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை சிரமமின்றி முன்பதிவு செய்ய யுடிஎஸ் மொபைல் ஆப் (UTS Mobile App) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

செயலியை பதிவிறக்கிய பிறகு, பயனர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யலாம். முதலில், அவர்கள் செயலியில் உள்நுழைந்து (Login) R-Wallet என்ற கட்டண சேமிப்பு கணக்கை ரீசார்ஜ் செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்து சிரமமின்றி பயணம் செய்யலாம்.

யுடிஎஸ் செயலியில் R-Wallet-ஐ ரீசார்ஜ் செய்வது எப்படி?

யுடிஎஸ் செயலியில் உள்ள R-wallet ஐகானை கிளிக் செய்யவும்.

ரீசார்ஜ் வாலட்டில் (Recharge Wallet) கிளிக் செய்யவும். 

நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பும் தொகையை உள்ளிடவும்.

UPI, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். பரிவர்ததனை முடிந்ததும், உங்கள் R-Wallet-இல் பணம் சேர்க்கப்படும்.

UTS செயிலியின் பயனர்கள், R-Wallet கட்டணத்தில் 3 சதவீத போனஸைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க | இதுதாங்க இந்தியாவோட விலையுயர்ந்த ரயில், ஒரு டிக்கெட் விலை இவ்வளவு லட்சமா?

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது மற்றும் பணம் செலுத்துவது எப்படி?

காகிதமற்ற அல்லது காகித விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். 

"புறப்படும்" நிலையத்தையும் "செல்ல இருக்கும்" நிலையத்தையும் தேர்ந்தெடுக்கவும்.

"Next" என்பதைக் கிளிக் செய்து, "Get Fare" (கட்டணம்) என்பதைக் கிளிக் செய்யவும். 

"புக் டிக்கெட்" என்பதைக் கிளிக் செய்யவும். R-wallet/UPI/net banking/card போன்ற பல்வேறு விருப்பங்களைப் பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்துங்கள்.

யுடிஎஸ் செயலியில் "ஷோ டிக்கெட்" விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் டிக்கெட்டுகளைப் பார்க்கலாம்.
இந்திய ரயில்வே முன்பு 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 40% தள்ளுபடியும், பெண் பயணிகளுக்கு குறைந்தபட்ச வயது 58 ஆக இருந்தால் 50% தள்ளுபடியும் அளிக்கிறது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்தச் சலுகைகள் அஞ்சல்/எக்ஸ்பிரஸ்/ராஜ்தானி/ சதாப்தி/துரண்டோ குழும ரயில்களின் அனைத்து வகுப்புகளுக்கும் வழங்கப்பட்டன. ஆனால் மார்ச் 20, 2020 அன்று திரும்பப் பெறப்பட்டன.

மேலும் படிக்க | ஜாக்பாட்! மூத்த குடிமக்களுக்கு ரயில்வே அளித்த மாஸ் தகவல், விரைவில் இந்த வசதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News