இந்தியாவில் வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம்? புதிய விதிகள்!

இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கு பெரிய விதிகள் எதுவும் இல்லை என்றாலும், வீட்டில் தங்கத்தை வைத்துக்கொள்ள சில விதிகள் உள்ளது.  அதனை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  

Written by - RK Spark | Last Updated : Apr 24, 2024, 12:27 PM IST
  • தங்க நகைகள் நல்ல முதலீடாக உள்ளது.
  • பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுகிறது.
  • பலரும் இதில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்தியாவில் வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம்? புதிய விதிகள்! title=

பண்டிகை நாட்கள் அல்லது வீட்டு விசேஷங்களுக்கு தங்கம் வாங்குவது இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பான ஒன்றாகவும், அவசர காலங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்று இதில் முதலீடு செய்கின்றனர்.  நீண்ட ஆண்டுகளாக தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் தங்கம் நிச்சயம் இருக்கும். நகைகள், நாணயங்கள் என ஏதாவது ஒரு வழியில் தங்கம் இருக்கும். தங்கம் வாங்குவது வீதி அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு உள்ளது. 

மேலும் படிக்க | தங்கத்தின் விலை குறைவது எப்போது? கிடுகிடுவென விலையேற காரணம் என்ன?

வீட்டில் எவ்வளவு தங்கம் வைக்கலாம் என்பதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தகவலின்படி, முறையான வருமான ஆதாரங்கள் மற்றும் விவசாய வருமானம், சட்டப்பூர்வமாக பெறப்பட்ட பணம் மற்றும் சேமிப்பிற்கு எந்தவித வரியும் விதிக்கப்படாது.

இந்தியாவில் ஒரு நபர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? 

திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை வைத்துக்கலாம். திருமணமாகாத ஆண் 100 கிராம் வரையில் தங்கம் வைத்திருக்கலாம். திருமணமான பெண் 500 கிராம் வரையில் தங்கம் வைத்திருக்கலாம். திருமணமான ஆண் 100 கிராம் வரை தங்கம் வைத்து இருக்கலாம். உங்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் போது வீட்டிலிருந்து கணக்கில் காட்டப்பட்ட தங்க நகைகளை எடுத்துச் செல்ல முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  தங்க நகைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், அதனை வீட்டில் சேமிப்பது தொடர்பான அரசாங்க விதிகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

ஒரு திருமணமான பெண் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார். திருமணமாகாத பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு 250 கிராம் ஆகும். அதே சமயம் ஆண்கள் 100 கிராம் வரை தங்கம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.  வீட்டில் சோதனை நடவடிக்கைகளின் போது, ​​நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குக் குறைவாக தங்கம் இருந்தால், அதிகாரிகள் நகைகள் அல்லது தங்கத்தை பறிமுதல் செய்ய முடியாது என்று அரசாங்க விதிமுறைகள் கூறுகின்றன. 

டிஜிட்டல் தங்கத்தின் மீதான வரி

தங்க நகைகள் மற்றும் நாணயங்களுடன் ஒப்பிடுகையில், டிஜிட்டல் தங்கம் வருமானத்தின் அடிப்படையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டிஜிட்டல் தங்கம் வாங்குதல்களின் அடிப்படையில், தனிநபர்கள் வாங்கும் போது GST மற்றும் பிற சிறிய கட்டணங்களை மட்டுமே செலுத்த வேண்டும். சட்டப்படி, டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதற்கு ஒரு நாளில் ரூ.2 லட்சம் வரை செலவிடலாம். கூடுதலாக, 3 ஆண்டுகளுக்கு குறைவாக வைத்திருக்கும் டிஜிட்டல் தங்கத்திற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி இல்லை. இருப்பினும், நீங்கள் 20% விகிதத்தில் நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | ரூ.5000த்தை வைத்து 5 கோடி சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News