IRCTC New Rules: டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிகளை அமல்படுத்தியது ஐஆர்சிடிசி!

5-11 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு முழு பெர்த் எடுத்தால் ரயில்வேக்கு முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையென்றால் டிக்கெட் விலையில் பாதி மட்டுமே செலுத்த வேண்டும்.   

Written by - RK Spark | Last Updated : Aug 17, 2022, 01:54 PM IST
  • இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முழு கட்டணமும் செலுத்த வேண்டும்.
  • புக் செய்யவில்லை என்றால் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
  • புதிய விதிகளை அறிவித்தது ஐஆர்சிடிசி.
IRCTC New Rules: டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிகளை அமல்படுத்தியது ஐஆர்சிடிசி! title=

ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு விதிகளை இந்தியன் ரயில்வே புதுப்பித்துள்ளது,  இந்த புதிய விதிகளின்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பயணிகள் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றால் இந்திய ரயில்வே கட்டணம் வசூலிக்காது.  இருப்பினும், ரயில்களில் குழந்தைகளுக்கான இருக்கைகளைச் சேர்ப்பதன் மூலம், இந்திய ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவை முன்பதிவு விதிமுறைகளை மாற்றியுள்ளன.  ஐஆர்சிடிசி இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, 1-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முழுக் கட்டணத்தையும் பயணிகள் செலுத்த வேண்டும்.  

முன்பதிவின்போது குழந்தைகளுக்கு இலவச பயணத்தைப் பெற, குழந்தை இருக்கையுடன் கூடிய பெர்த்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.  இந்திய ரயில்வேயால் 06.03.2020 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எண் 12-ன் படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்வதற்கு முன்பதிவு தேவையில்லை மற்றும் கட்டணமின்றி ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம்.  இருப்பினும் பெர்த் தேவைப்பட்டால், டிக்கெட்டை முன்பதிவு செய்வதன் மூலம் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.  இந்திய ரயில்வே சமீபத்தில் லக்னோ மெயிலின் ஏசி மூன்றாவது போகியில் பேபி பெர்த்களை சேர்த்தது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ரூ. 7500-ல் இருந்து ரூ. 25,000 ஆக உயரும் ஓய்வூதியம்?

ரயில் நிலையங்களில் ஐஆர்சிடிசி மற்றும் ரயில்வே ரிசர்வேஷன் பூத்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ​​5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை வழங்கும் முறையை ரயில்வே இப்போது அமல்படுத்தியுள்ளது, இதுவரை 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.  இதன்படி, 5-11 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு முழு பெர்த் எடுத்தால், ரயில்வேக்கு முழு கட்டணத்தை செலுத்த வேண்டும்.  அதேசமயம் முழு பெர்த் எடுக்கவில்லை என்றால், டிக்கெட் விலையில் பாதி மட்டுமே செலுத்த வேண்டும். 

0-4 வயது குழந்தைகளுக்கான பெர்த்களை தேர்ந்தெடுத்தால் குழந்தைகளுக்கு இலவசம், இல்லையெனில் முழுக் கட்டணம் செலுத்த வேண்டும்.  5-11 வயது குழந்தைகளுக்கு முழு பெர்த்தையும் தேர்ந்தெடுத்தால் முழு கட்டணம், இல்லையென்றால் பாதி மற்றும் 12 வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு முழு கட்டணம் செலுத்தவேண்டும்.  ரயில் டிக்கெட்டில் முழு தள்ளுபடியைப் பெற, குழந்தைகள் இருக்கையுடன் கூடிய ரயில் பெர்த்தை முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | கார்களுக்கு லோன் பெற சில எளிய டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News