1 டீஸ்பூன் இந்த எண்ணெய் தடவினால் போதும்.. முடி அடர்த்தி பெறலாம்

Hair Care Tips: விளக்கெண்ணெய் வைத்து ஹேர் பேக் எப்படி தயார் செய்வது என்பதை நாம் காணப் போகிறோம். மேலும் இந்த ஹேர் பேக் எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதை பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 16, 2024, 06:00 PM IST
  • விளக்கெண்ணெய் வைத்து ஹேர் பேக்.
  • இந்த ஹேர் பேக் எப்படி பயனுள்ளதாக இருக்கும்?
1 டீஸ்பூன் இந்த எண்ணெய் தடவினால் போதும்.. முடி அடர்த்தி பெறலாம் title=

Hair Care Tips: இன்றைய வாழ்க்கை முறை, தவறான உணவுப்பழக்கம், அதிகரித்து வரும் மாசுபாடு போன்றவற்றால், முடி வளர்ச்சியடைய முடியாமல் போகிறது. இதன் காரணமாக, உங்கள் தலைமுடி வறண்டு, உயிரற்றதாக மாறி, முடி உதிர்தல் மற்றும் வழுக்கை போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், மீண்டும் தலையில் முடி வளர, நீங்கள் விலையுயர்ந்த மற்றும் வலிமிகுந்த சிகிச்சைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. அதனால்தான் இன்று உங்களுக்காக விளக்கெண்ணெய் ஹேர் பேக்கைக் கொண்டு வந்துள்ளோம். விளக்கெண்ணெய் ஹேர் பேக் கற்றாழையின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது, எனவே இந்த இரண்டு பொருட்களின் கலவையும் உங்கள் தலைமுடியை அடர்த்தியாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செய்முறையை முயற்சிப்பதன் மூலம், உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும், எனவே விளக்கெண்ணெய் ஹேர் பேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்....

விளக்கெண்ணெய் ஹேர் பேக் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்-

கற்றாழை ஜெல் 3-4 தேக்கரண்டி
விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன்

விளக்கெண்ணெய் ஹேர் பேக் செய்வது எப்படி?
விளக்கெண்ணெய் ஹேர் பேக் செய்ய, முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதில் புதிய கற்றாழை ஜெல் மற்றும் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கவும்.
அதன் பிறகு, இந்த இரண்டு பொருட்களையும் நன்கு கலக்கவும்.
இப்போது உங்கள் விளக்கெண்ணெய் ஹேர் பேக் தயார்.

மேலும் படிக்க | சரும பராமரிப்புக்கு மட்டுமல்ல, நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படும் வாழைப்பழத்தோல் மகிமை!

விளக்கெண்ணெய் ஹேர் பேக்கை எப்படி பயன்படுத்துவது?
உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடி நுனியில் விளக்கெண்ணெய் ஹேர் பேக்கை நன்கு தடவவும்.
இந்த பேக்கை முடியில் சுமார் 20-30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
அதன் பிறகு, லேசான ஷாம்பூவின் உதவியுடன் தலைமுடியைக் கழுவவும்.

விளக்கெண்ணெய் தடவினால் முடி அடர்த்தியாகுமா?
முடி தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதில் எண்ணெய்கள் மிகவும் நன்மை பயக்கும். மெல்லிய முடியை அடர்த்தியாக மாற்றவும் எண்ணெய் பயன்படுத்தலாம். இதற்கு விளக்கெண்ணெய் முடிக்கு நன்மை பயக்கும். இந்த எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் முடிக்கு அவசியமானவை. இவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன, இதன் காரணமாக உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது.

விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டை தடவலாம்:
தேங்காய் எண்ணெயில் அதிக புரதம் உள்ளது, இது பொடுகை நீக்க உதவுகிறது. முட்டை உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது. இதன் காரணமாக முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மற்ற உதவும். இந்த மூன்றையும் கலந்து முடியில் தடவலாம். இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் 30 நிமிடம் தடவி, பிறகு ஷாம்பு கொண்டு தலையை அலசவும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதா? இரத்த புரதம் சொல்லும் ரகசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News