செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

பலருக்கும் கார் வாங்கும் கனவு இருக்கும்.  நம்மில் பலர், புதிய கார் வாங்குவதைவிட செகண்ட் ஹேண்ட் கார் வாங்குகிறோம்.  அதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.  

Written by - RK Spark | Last Updated : Nov 9, 2023, 07:55 AM IST
  • கார் வாங்குவது பலரது கனவு.
  • புதிய கார் வாங்கினால் பிரச்சனை இல்லை.
  • பழைய கார் வாங்கும் போது கவனம் தேவை.
செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை! title=

குறைந்த பட்ஜெட்டில் குடும்பத்தை நடத்துபவர்களுக்கு புதிய கார் வாங்குவதை விட, ஏற்கனவே பயன்படுத்திய கார்கள் வாங்குவது ஒரு நல்ல முடிவாக இருக்கும்.  சிலர் பழைய காரை வாங்க விரும்பாமல் புதிய கார்களை வாங்குகின்றனர்.  இருப்பினும், பயன்படுத்திய காரை வாங்குவதற்கு முன் சில விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.  பயன்படுத்திய காரை வாங்கும் முன் அந்த கார் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  கார் விபத்துக்கு உள்ளாகி உள்ளதா அல்லது சர்வீஸ் செய்த விவரங்கள், பாகங்கள் மாற்றிய விவரங்கள் என அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் அந்த கார் திருடப்பட்ட ஒன்றா, நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். குறிப்பாக பழைய மாடல் கார்களை வாங்கும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.  

மேலும் படிக்க | ஜியோ வாடிக்கையாளர்களே..! நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் இலவசம்

பயன்படுத்திய காரை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

காரின் தற்போதைய நிலையை சரி பார்க்க வேண்டும்: உங்கள் தேவைகளின் அடிப்படையில் சரியான காரைக் கண்டுபிடித்த பிறகு, காரின் நிலையைச் சரிபார்ப்பது வாங்கும் முன் பின்பற்ற வேண்டிய முக்கிய படியாகும். காரின் நிலையுடன், உட்புறம், வெளிப்புறம், ஃப்ரேமிங், டயர்கள், இன்ஜின் நிலை, மைலேஜ், ஸ்பீட்ஓமீட்டர், டெஸ்ட் டிரைவ் மற்றும் எஞ்சின் உள்ளிட்ட பல விஷயங்களைச் சரிபார்க்க வேண்டும். இதன் மூலம் காரின் ஆரோக்கியத்தை நீங்கள் சரிபார்க்கலாம். இதில் ஏதேனும் கோளாறுகள் இருந்தால் காரின் விலையை குறைத்து பேச முடியும்.

முன் பராமரிப்பு பதிவு: காரை இதற்கு முன்பு எங்கு சர்வீஸ் செய்தார்கள், என்ன என்ன பாகங்கள் மாற்றி உள்ளார்கள், எவ்வளவு கிலோ மீட்டர் கார் ஓடி உள்ளது, டயர்களின் நிலை என அனைத்தையும் சரிபார்ப்பது அவசியம். சிலர் இவற்றை முறையாக பதிவு செய்து வைத்து இருப்பார்கள்.  அப்படிபட்ட கார்களை வாங்குவது நல்லது.  கார் பராமரிப்பு செய்த விவரங்கள் இருந்தால், என்ன என்ன வேலைகள் காரில் நடந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். 

பதிவுச் சான்றிதல்: வாகனத்தின் RC என்றும் அழைக்கப்படும் பதிவுச் சான்றிதழ், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் பதிவு ஆவணமாகும். இதில் இன்ஜின் எண், சேஸ் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்று இருக்கும். ஆர்டிஓ உதவியுடன் கார் வாங்கிய பிறகு நமது பெயருக்கு மாற்றி கொள்ளலாம். நீங்கள் வேறு நகரத்திற்கு செல்ல விரும்பினால், அந்த பகுதியின் பிரத்யேக ஆர்டிஓவிடம் கார் பதிவு செய்யப்பட வேண்டும்.  பயன்படுத்திய காரை வாங்கும் போது அதன் அசல் RC, காப்பீடு விவரங்கள், சாலை வரி போன்ற முக்கிய ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்.  இதில் இது திருட்டு காரா என்பதையும் கண்டுபிடிக்கலாம்.

வாகன காப்பீடு: பயன்படுத்திய காரை வாங்கும் போது, ​​காப்பீடும் உங்கள் பெயருக்கு மாற்றப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்ஷூரன்ஸ் பாலிசியில் எவ்வளவு கால அவகாசம் இருந்தாலும், பாலிசியில் பெயர் மாற்றப்படாவிட்டால், ஏதேனும் விபத்து அல்லது டேமேஜ் ஏற்பட்ட பிறகு, காப்பீட்டு நிறுவனம் எந்தவொரு கோரிக்கையையும் செலுத்தாது.  உங்கள் காப்பீட்டை (காலாவதியானால்) சரியான நேரத்தில் புதுப்பிப்பதை உறுதிசெய்யவும். புதிய இன்சூரன்ஸ் பாலிசிகளை முழுவதும் தெரிந்து கொண்டு பெறுங்கள்.

மேலும் படிக்க | Flipkart Big Diwali Sale: பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.4,999 க்கு ஐபோன் விற்பனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News