வெறும் 10 ரூபாய் இருந்தால் போதும்.. யூரிக் அமில அளவை அசால்டாக குறைக்கலாம்

Uric Acid Home Remedy: அதிக யூரிக் அமிலத்தை கட்டுபடுத்த விலையுயர்ந்த மருந்துகளுக்குப் பதிலாக சில மலிவான வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் போதும். அவை என்ன வீட்டு வைத்தியம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 13, 2024, 05:22 PM IST
  • மூட்டு வலி மற்றும் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்த உதவும்.
  • யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த இஞ்சி.
  • ஓமம் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.
வெறும் 10 ரூபாய் இருந்தால் போதும்.. யூரிக் அமில அளவை அசால்டாக குறைக்கலாம் title=

Home Remedies For Uric Acid: தவறான உணவுப் பழக்கங்கள், மோசமான வாழ்க்கை முறை போனவற்றை தான் யூரிக் அமிலம் அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும். உண்மையில், யூரிக் அமிலம் என்பது நமது உடலில் உள்ள ஒரு வகையான கழிவுப் பொருள், இது பியூரின் என்ற வேதிப்பொருளின் முறிவால் உருவாகிறது. பொதுவாக, சிறுநீரகங்கள் அதை வடிகட்டி, சிறுநீர் மூலம் உடலில் இருந்து அகற்ற உதவும். ஆனால் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, ​​அது கூர்மையான படிக வடிவில் மூட்டுகளில் குவியத் தொடங்கிவிடுகிறது. மேலும் இதனால் மூட்டுகளில் வலி, வீக்கம் போன்றவை ஏற்படத் தொடங்கிவிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வேண்டும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது தவிர, யூரிக் அமிலத்தை குறைக்க சில வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கலாம். இந்த வைத்தியத்தில் இஞ்சியின் பங்கு மிகவும் பெரியது. ஆம், யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்துவதில் இஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த இஞ்சி எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும், மேலும் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

யூரிக் அமிலத்தை குறைக்க இஞ்சி - Ginger Benefits To Control High Uric Acid
உடலில் அதிகரித்த யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த இஞ்சியை பயன்படுத்தலாம். இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது, இது பல நோய்களைக் குணப்படுத்தவும் உதவும். ஏனெனில் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது, எனவே இது யூரிக் அமிலத்தை போக்க உதவுகிறது. இதனை உட்கொள்வதால் யூரிக் அமிலத்தால் ஏற்படும் மூட்டு வலி மற்றும் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்த உதவும். 

யூரிக் அமிலத்திற்கு இஞ்சியை எப்படி உட்கொள்ளுங்கள் - How To Consume Ginger In High Uric Acid

யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த, பல வழிகளில் இஞ்சியை உட்கொள்ளலாம். அவற்றை என்னென்ன என்பதை பார்ப்போம்:

மேலும் படிக்க | weight loss: டயட் வேண்டாம், ஜிம் வேண்டாம்: எடையை குறைக்க அட்டகாசமான 4 டிப்ஸ்

இஞ்சி டீ
இஞ்சி டீ தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும். பின்னர் 1 துண்டு இஞ்சியை நறுக்கி தண்ணீரில் சேர்க்கவும். அதன் பிறகு, சுமார் 5-10 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதித்ததும் வடிகட்டி பருகவும்.

ஓமத்துடன் இஞ்சியை உட்கொள்ளலாம்
ஓமம் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், இவை மூட்டு வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்க உதவும். இதைப் பயன்படுத்த, ஒரு கிளாஸ் தண்ணீரை முதலில் சூடாக்கவும். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சியை சேர்க்கவும், மேலும் அதில் ஒரு ஸ்பூன் ஓம்மத்தை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டி அதில் தேன் கலந்து பருக்கவும்.

அதிக யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சியை உட்கொள்வது நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடம்பை ஸ்லிம்மா சிக்குனு வெச்சுக்க துளசியா? கறிவேப்பிலையா? எது பெஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News