10 கிலோ வரை எடை குறைக்கலாம்; ஆனா உணவில் இதை சேர்த்துக்கொள்ளுங்கள்

குளிர்காலத்தை காட்டிலும் கோடை காலத்தில் உடல் எடையை வேகமாக குறைத்து விடலாம். குறிப்பாக இளநீர் குடித்து வந்தால் கட்டாயம் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 2, 2024, 10:18 AM IST
  • வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.
  • உடல் எடையை குறைக்க இளநீர்.
  • நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதுடன் புத்துணர்ச்சியூட்டவும் உதவும்.
10 கிலோ வரை எடை குறைக்கலாம்; ஆனா உணவில் இதை சேர்த்துக்கொள்ளுங்கள் title=

Coconut Water For Weight Loss : உடல் எடையைக் குறைக்க ஏற்ற காலம் கோடைக்காலமாகும். ஏனெனில் இந்த நேரத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகமாக இருக்கும், மேலும் குளிர்காலத்தை காட்டிலும் கோடை காலத்தில் அதிகம் சாப்பிட தோன்றாது, குறிப்பாக எண்ணெய் பண்டங்களை நாம் தவிர்ப்போம். இந்த நேரத்தில் பசியின்மை சற்று குறைவாகவே இருக்கும், அதுமட்டுமின்றி பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதன் காரணமாக உடல் எடையை குறைப்பது மிகவும் எளிது. குறிப்பாக இளநீர் போன்ற உடல் எடையை குறைக்க உதவும் பானம் மிகவும் சிறந்த தேர்வாகும். உண்மையில், இது குறைந்த கலோரி பானங்களில் ஒன்றாகும், இது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவும். இது தவிர, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.

இந்நிலையில் உடல் எடையை (Weight Loss Tips In Tamil) குறைக்க இளநீர் (Coconut Water) எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்:

1. நீரிழப்பு: நீரேற்றமாக இருந்தால் உடல் எடையை (Weight Loss With Coconut Water) சுலாமாக குறைக்கலாம். ஏனெனில் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும், மேலும் பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும். இளநீரில் அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் எலக்ட்ரோலைட் கலவை உள்ளதன் காரணமாக இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதுடன் புத்துணர்ச்சியூட்டவும் உதவும்.

2. கலோரிகள் குறைவு: சோடா அல்லது பழச்சாறு போன்ற பல சர்க்கரை பானங்களுடன் ஒப்பிடுகையில், இளநீரில் கலோரிகள் குறைவாக உள்ளது. 240-மிலி இளநீரில் தோராயமாக 45-60 கலோரிகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், உடல் எடையை குறைக்க உதவுகிறது. எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் இளநீரை சேர்த்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Aloe Vera Benefits: கோடைகாலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்போ இதை மட்டும் பண்ணுங்க

3. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை: இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகின்றன, இதனால் உடல் எடை குறைக்க உதவும்.

4. இயற்கையான எலக்ட்ரோலைட் சமநிலை: இளநீர் எலக்ட்ரோலைட்டுகளின் இயற்கையான மூலமாகும், இது உடலில் திரவ சமநிலையை பராமரிக்க அவசியம். அத்தகைய சூழ்நிலையில், உடல் எடையைக் குறைக்க உதவும்.

5. பசியின்மை: சில ஆய்வுகள் இளநீர் பசியை அடக்க உதவும் என்று கூறப்படுகிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இதன் காரணமாக உங்களுக்கு பசி குறைவாக எடுக்கும். உணவுக்கு முன் இளநீரைக் குடிப்பதால், நீங்கள் முழுதாக உணரவும், ஒட்டுமொத்தமாக குறைவான கலோரிகளை உட்கொள்ளவும் உதவும், இது காலப்போக்கில் எடை இழப்புக்கு பங்களிக்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Carrom seeds benefits for hair : என்ன பண்ணாலும் முடி கொட்டுதா? அப்போ உங்க ஹேர் ஆயிலில் இதை கலந்து தடவவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News