திரைப்படமாக மாறுகிறது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு..! ஹீரோ யார் தெரியுமா..?

‘இசைஞானி’ என ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். 

Written by - Yuvashree | Last Updated : Aug 2, 2023, 08:50 AM IST
  • இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது.
  • ஹீரோவாக முன்னணி நடிகர் ஒருவர் வருகிறார்.
  • இயக்குநர் யார் தெரியுமா..?
திரைப்படமாக மாறுகிறது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு..! ஹீரோ யார் தெரியுமா..?  title=

இசையுலக ரசிகர்களால் ‘இசைஞானி’ என அழைக்கப்படுபவர் இளையராஜா. தமிழ் திரையுலகின் இசை ஜாம்பவானாக வலம் வரும் இவர், 70’ஸ், 80’ஸ் ஹீரோக்கள் முதல் தற்போதைய ஹீரோக்கள் வரை பலருக்கும் இசையமைத்து கொடுத்திருக்கிறார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முன்னணி நடிகர் ஒருவர்தான் ஹீரோவாக நடிக்கிறார். 

இளையராஜா:

சுமார் 45 வருட காலமாக தமிழ் திரையுலகின் இசை பிரிவை ஆண்டு வருபவர் இளையராஜா. நூற்றுக்கனக்கான படங்களுக்கு இசையமைத்து எண்ணிலடங்கா இனிமையான பாடல்களை பலருக்கும் கேட்காமலேயே பரிசாக கொடுத்தவர் இவர். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கப்போவதாக பிரபல இயக்குநர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அதில் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்க இருக்கிறார். 

இவர்தான் ஹீரோ…!

நடிகர் தனுஷை இளையராஜாவாக அவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க வைக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் சில படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். கடைசியாக வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘விடுதலை’ படத்தில், ‘உன்னோட நடந்தா..’ பாடலை தனுஷ் பாடியிருந்தார்.

இளையராஜா

இந்த பாடலின் மேக்கிங் வீடியோவில் எப்படி பாட வேண்டும் என தனுஷிற்கு இளையராஜா சொல்லிக்கொடுப்பதும் தனுஷ் அதற்கு அவரை கையெடுத்து கும்புடுவதும் வைரலானது. இந்த நிலையில், இளையராஜாவாக தனுஷே நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் படிக்க | ‘மாமன்னன்’ படத்திற்கு ஒரு மாதம் கழித்து விமர்சனம் கொடுத்த லோகேஷ் கனகராஜ்…!

இயக்குநர் யார்..? 

நடிகர் தனுஷை வைத்து இந்தியில் ‘ஷமிதாப்’ என்ற படத்தை இயக்கியவர் பால்கி. இவர் பாலிவுட்டின் ஹிட் கொடுக்கும் இயக்குநர்களின் பட்டியலில் ஒருவராக விளங்குகிறார். தென்னிந்திய நடிகர்களை தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஆசைப்படும் இயக்குநர்களுள் பால்கியும் ஒருவர். இவர்தான், ஒரு நேர்காணலில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இது குறித்து பேசியுள்ள அவர், தனுஷ் திறமையான நடிகர் மட்டுமன்றி நல்ல இயக்குநர் என்றும் அவருக்கு எந்த கதையை எப்படி கொண்டு போக வேண்டும் என்று தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இளையராஜாவின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 

வெற்றி நாயகனாக மாறிய தனுஷ்..!

நடிகர் தனுஷ், தான் கடைசியாக நடித்திருந்த சில படங்களில் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை என்ற கருத்து நிலவியது. மாரி 2, மாறன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட அவரது படங்கள் பெரும் தோல்வியை தழுவின. இதையடுத்து அவர் இந்தியில் நடித்திருந்த அட்ராங்கி ரே திரைப்படமும் பெரிதாக வெற்றியடைவில்லை. இந்த தோல்விகளை ஈடகட்டும் வகையில் நடிகர் தனுஷ் ‘திருச்சிற்றம்பலம்’ படம் மூலம் கம்-பேக் கொடுத்தார். 

50வது படம்..

தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் பட வேலைகளில் படு பிசிாயாக உள்ளார். இந்த படத்தில் ஈழத்தமிழர்களுக்காக போராடி உயிர் நீத்த ‘கேப்டன் மில்லராக’ வருகிறார் தனுஷ். இதையடுத்து அவர் தனது 50 படத்தின் வேலைகளில் இறங்க உள்ளார். இதனை தனுஷே இயக்கி நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். 

ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன...?

இளையராஜாவின் இசையும் சினிமா பயணமும் அனைவருக்கும் பிடித்த ஒன்று. ஆனால், அவர் சமீப சில காலங்களாக மேடை நிகழ்ச்சிகள்அல்லது பொது வெளியில் நடைப்பெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது சக கலைஞர்களுக்கு மறியாதை கொடுப்பதில்லை என்ற பேச்சு அடிபடுகிறது. ஊடகங்கள் முன்னிலையிலேயே பலரையும் அவர் அவமரியாதையுடன் பேசியுள்ளார். கலைஞரையும் கலையையும் வேறுபடுத்தி பார்க்கும் மக்கள் நம்ம ஊரில் சிலர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் ராஜாவை வைத்து படம் எடுக்கப்போகும் செய்தி வந்ததில் இருந்து பலர் சிரிப்புடனும் சிலர் முறைப்புடனும் உள்ளனர். 

மேலும் படிக்க | சமந்தாவிற்கு ஜோடியாக நடிக்கும் சந்தானம்..? ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ நாயகன் சொன்ன சூப்பர் தகவல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News