தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான 'குக் வித் கோமாளி' பிரபலம்!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரித்திகா தமிழ்செல்வி ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 10, 2022, 03:36 PM IST
  • குக் வித் கோமாளி' மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்திகா தமிழ்செல்வி.
  • விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரின் மூலம் அறிமுகமானார்.
  • நடிகர் சதீஷ் ஜோடியாக தான் ரித்திகா நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான 'குக் வித் கோமாளி' பிரபலம்! title=

சின்னத்திரையிலிருந்து பலரும் வெள்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருக்கிறார், அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் இருந்த ரித்திகாவிற்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளுள் ஒன்றான 'குக் வித் கோமாளி' மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்திகா தமிழ்செல்வி.  இந்நிகழ்ச்சியில் இவருக்கும் பாலாவுக்கும் இடையே நிகழும் சில சம்பவங்கள் பெரும்பாலானவர்களால் ரசிக்கப்பட்டது.  இவர் முதன்முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரின் மூலம் அறிமுகமானார், இந்தத் தொடரை விட இவரை பிரபலமாக்கியது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிதான்.

rithika

மேலும் படிக்க | RRR பார்ட் 2 எடுக்க ராம்சரண் - ஜூனியர் என்டிஆர் விருப்பம் - ராஜமௌலி கொடுத்த பதில்

இந்நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது ரித்திகா விஜய் டிவியில் 'பாக்யலக்ஷ்மி' தொடரில் நடித்து வருகிறார், இத்தொடரில் இவரது கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர், ஒரு படி உயர்ந்து கதாநாயகியாக அனைவரையும் மகிழ்விக்க போகிறார்.  தற்போது அவர் கதாநாயகியாக உருவெடுத்துள்ளதை அவரது இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

rithika

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக புதிய பரிமாணத்தில் தோன்றியிருக்கும் நடிகர் சதீஷ் ஜோடியாக தான் ரித்திகா நடிக்கிறார். இந்த படத்தை 'சிக்ஸர்' படத்தை இயக்கிய சாச்சி இயக்குகிறார்.  வித்யா பிரதீப், பாவல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தை சண்முகம் கிரியேஷன்ஸ் மற்றும் சீட்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் & கிரிஷ் புரொடக்ஷன் ஹவுஸ் இணைந்து தயாரிக்கிறது.  ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையமைக்கும் இந்த படத்தை பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.  மேலும் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட உள்ளார்.

 

மேலும் படிக்க | விஜய், அஜித்தை முந்தும் தனுஷ்! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News