குக் வித் கோமாளியில் கலந்து கொள்ள இருக்கும் ‘அந்த’ பிரபலம்! இவங்க வந்தா பிரச்சனையாச்சே..

Cooku With Comali 5 Latest News Tamil : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 5வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளதை அடுத்து, இதில் யார் யார் பங்கேற்க உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Mar 25, 2024, 07:38 PM IST
  • குக் வித் கோமாளி 5வது சீசன் விரைவில் ஆரம்பிக்க உள்ளது
  • இதில் ஒரு முக்கிய பிரபலம் கலந்து கொள்கிறாராம்
  • அவர் யார் தெரியுமா?
குக் வித் கோமாளியில் கலந்து கொள்ள இருக்கும் ‘அந்த’ பிரபலம்! இவங்க வந்தா பிரச்சனையாச்சே.. title=

Cooku With Comali 5 Latest News Tamil : மக்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்று, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின 5வது சீசன் தற்போது புத்தம் புது பொலிவுடன் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் பிரபலங்கள் குறித்த லிஸ்ட் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. 

குக் வித் கோமாளி 5:

கடந்த சில ஆண்டுகளாக, தொலைக்காட்சி சேனல்களுள் மக்களின் அதிக கவனத்தை ஈர்த்த சேனலாக இருக்கிறது, தளபதி நடிகரின் பெயரை கொண்ட அந்த சேனல். இதில், சூப்பர் ஹிட் ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தன. ஆனால், நாட்கள் உருண்டோட, அந்த நிகழ்ச்சிகளும் முடிந்து விட்டன. தற்போதுள்ள நிகழ்ச்சிகள், முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் அளவிற்கு பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதற்கு காரணம், மக்களின் மனநிலை மாற்றம் என்று கூறலாம். மக்களால், தற்போது அதிகம் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்று, குக் வித் கோமாளி. 

இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனிற்கான ப்ரமோ, சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் வழக்கம் போல செஃப் தாமுதான் ஜட்ஜ் ஆக வருகிறார். இவருடன் இணை நடுவராக இருக்க வேண்டிய செஃப் வெங்கடேஷ் பட், இப்போட்டியில் இருந்து விலகியிருக்கிறார். இதற்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை. இதையடுத்து, நடிகரும் சமையல் கலை நிபுணருமான மதம்பட்டி ரங்கராஜ், இரண்டாவது நடுவராக வர இருக்கிறார். 

குக் வித் கோமாளியில் சர்ச்சைக்குரிய பிரபலம்..

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பல பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்தவர்களாக இருப்பர். அந்த வகையில், பிக்பாஸ் மூலம் பிரபலமாகி பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குள் நுழைந்தவர், வனிதா விஜயகுமார். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் அவர் டைட்டில் வின்னர் ஆனார். நடிகையாக மட்டுமன்றி, சமையல் கலை பயின்றவராகவும் இருக்கிறார், வனிதா. இவரது சமையலுக்கு அடிமையானவர்கள் பலர், குக் வித் கோமாளி செட்டில் இருக்கின்றனர். 

மேலும் படிக்க | குக் வித் கோமாளியில் இருந்து விலகிய நடுவர்! வேறு சேனலுக்கு செல்கிறாரா?

Vanitha Vijayakumar

சமீபத்தில் வனிதா தனது ஃபாலோவர்ஸ் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அதில், ஒருவர் வனிதாவின் மகள் ஜோவிகா குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்று கேட்க, இவர் “அவருக்கு டேட்ஸ் பிசியாக இருக்கிறது. ஆனால் நீங்கள் என்னை எதிர்பார்க்கலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிரக்கள், அய்யோ மீண்டும் இவரா, இவர் வந்தாலே கூடவே பிரச்சனையும் வந்து விடுமே என்று கூறி வருகின்றனர். 

குக் வித் கோமாளியில் புது காேமாளி..

தமிழ் சின்னத்திரையில் ஹிட் அடித்த சில சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர், ஷப்னம். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை உலகில் நடிகையாக வலம் வரும் இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய கோமாளியாக இருக்கிறாராம். இவர் முதன் முதலில் நடித்த தொடரின் பெயர், தெய்வமகள். இத்தாெடரில் இவர், கதாநாயகிக்கு தங்கையாக நடித்திருந்தார். இதையடுத்து, ஷப்னம் தொடர்ந்து சில பிரபலமான தொடர்களிலும் நடித்தார். இவர் வில்லியாக நடித்த ‘ராஜா ராணி’ தொடர் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது. 

மேலும் படிக்க | CWC 5 : குக் வித் கோமாளி 5-ல் புதிய கோமாளி! இவங்கள எதிர்பார்க்கவே இல்லையே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News