குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா?

Kushi Cast and Crew Salary details: இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள படம், குஷி. இதில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 3, 2023, 02:37 PM IST
  • குஷி திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது.
  • விஜய் தேவரகொண்டா-சமந்தா ஜோடியாக நடித்துள்ளனர்.
  • இதில் சம்பளம் யாருக்கு அதிகம்? முழு விவரம்!
குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா? title=

சிவா நிர்வானாஇயக்கத்தில் கடந்த வெள்ளியன்று  (செப்., 1) வெளியான படம் குஷி. இதில், விஜய் தேவரகொண்டா விப்லவ் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமந்தா, ஆராத்யா என்ற கதாப்பாத்திரத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். காமெடி-காதல் டிராமா பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. சரண்யா பொன்வண்ணன், பரத் ரெட்டி, ரோகிணி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

இரண்டு ஸ்டார்களின் கம்-பேக்:

குஷி படத்தின் நாயகன்-நாயகியான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோரின் சமீபத்திய படங்கள் தோல்வியில் முடிந்தன. இருவரது ரசிகர்களும் குஷி படத்தில் இவர்களின் கம்-பேக்கிற்காக காத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக நடிகை சமந்தாவின் ‘சாகுந்தலம்’ படம் பெரும் தோல்வி அடைந்து ரசிகர்களை ஏமாற்றியது. குஷி படத்தின் பாதி படப்பிடிப்பின் போதுதான் அவர் மயேசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டார். இதனால், இதன் படப்பிடிப்பும் பாதியிலேயே தடைப்பட்டது. இவருக்காகவாவது இந்த படம் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டனர். 

அதே போல, தென்னிந்திய திரையுலகின் ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவிற்கும் அவரது கடைசி படமான ‘லைகர்’ தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இவர்கள் இருவருக்குமே குஷி படம் நல்ல திருப்பமாக அமைந்துள்ளது. 

மேலும் படிக்க | தளபதி 68 படத்தில் விஜய்யுடன் நடிக்க மறுத்த ஜோதிகா..! வேற ஹீரோயின் பாத்தாச்சு..!

சம்பள விவரம்..

குஷி படத்தின் நடித்துள்ள நடிகர் நடிகைகளின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் அதிக சம்பளம் பெற்ற நடிகர் யார் தெரியுமா? 

விஜய் தேவரகொண்டா:

2011ஆம் ஆண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டியர் காமரேட், நோட்டா, வர்ல்டு ஃபேமஸ் லவ்வர் உள்ளிட்ட படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. சில காலங்கிளலேயே பல லட்சம் ரசிகர்கள் இவருக்கு சேர்ந்துவிட்டனர். இவர் தற்போது ஒரு படத்திற்கு 6 முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. குஷி படத்தில் இவர் 7 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம். 

சமந்தா:

தென்னிந்தியாவின் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர், சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மாெழி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர், இந்தியில் சிட்டடெல் எனும் தொடரிலும் நடித்துள்ளார். ஒரு படத்திற்கு 6-7 கோடி வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் குஷி படத்திற்காக இவர் 4 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

சச்சின் கேதேகார்:

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் வலம் வருபவர், சச்சின் கேதேகார். இவர் குஷி படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். இவருக்கு 50 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். 

சரண்யா பொன்வண்ணன்:

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பெரும்பாலும் பல ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருபவர் சரண்யா பொன்வண்ணன். குஷி படத்திலும் விஜய் தேவரகொண்டாவின் தாயாக நடித்துள்ளார். இவர் இதில் நடிக்க 30 லட்ச ரூபாயை சம்பளமாக வாங்கியுள்ளாராம். 

ரோகினி:

80ஸ் நாயகிகளுள் மிகவும் பிரபலமானவர் ரோகினி. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் இவர், அவ்வபோது சில நேர்காணல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். குஷி படத்திலும் அப்படி ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளா.ர் இதற்காக அவருக்கு 20 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். 

மேலும் படிக்க | கம்-பேக் கொடுத்தாரா சமந்தா..? ‘குஷி’ படம் எப்படி? ட்விட்டர் விமர்சனம் இதாே..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News