Samantha: சமந்தாவிற்கு 2வது திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Samantha Second Marriage: பிரபல நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Feb 9, 2024, 07:22 PM IST
  • தென்னிந்தியாவின் முன்னணி நடிகை, சமந்தா.
  • இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்.
  • யார் மாப்பிள்ளை? முழு விவரம்!
Samantha: சமந்தாவிற்கு 2வது திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?  title=

Samantha Second Marriage: தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா, விரைவில் இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. 

தென்னிந்திய நடிகை சமந்தா..

தமிழில், விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், சமந்தா. பானா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி உள்ளிட்ட படங்களில் தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையின் போது நடித்திருந்தார். அதன் பிறகு, வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் தெலுங்கு ரீ-மேக்கில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் உள்பட இவர் நடித்த பிற படங்களும் வெற்றி பெற, தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்தார். 

நடிகை சமந்தா, கிட்டத்தட்ட 14 வருடங்களாக திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், தெலுங்கிலும் நாக சைதன்யா, விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோருக்கு நாயகியாக நடித்தார். இப்படி நன்றாக போய்க்கொண்டிருந்த சமந்தாவின் சினிமா வாழ்க்கை கடந்த சில ஆண்டுகளாக சரிவை சந்தித்து வருகிறது. 

விவாகரத்தில் முடிந்த திருமணம்..!

நடிகை சமந்தா, கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்திருந்த இவர்கள், ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்தனர். இடையிடையே வெவ்வேறு ஆட்களுடன் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்தனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் காதல் வயப்பட, அது திருமணத்திலும் முடிந்தது. இந்த நிலையில், இவர்களின் திருமண வாழ்க்கையிலும் புயல் வீசத்தொடங்கியது. இறுதியில் இருவரும் ஒன்றாக முடிவு செய்து 2021ஆம் ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து விலகிக்கொண்டனர். 

மேலும் படிக்க | அடேங்கப்பா.. கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

2வது திருமணம்? 

சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்து விட்டாலும் தங்களது சினிமா வாழ்க்கையில் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வீட்டில் பெரியவர்கள் பார்த்து சமந்தாவிற்கு தூரத்து உறவினர் ஒருவரை பேசி முடித்திருப்பதாகவும் அவருடன் சமந்தாவிற்கு விரைவில் திருமண பேச்சு வார்த்தை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் பட வாய்ப்பை இழந்த சமந்தா:

நடிகை சமந்தா, கடந்த 3 ஆண்டுகளில் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியில் முடிந்து வருகின்றன. காத்து வக்குல ரெண்டு காதல், யசோதா, சாகுந்தலம் என வரிசையாக அனைத்து படங்களும் படு தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில், இவர் கைவசம் ஒரு ஹாலிவுட் பட வாய்ப்பு இருந்தது. சென்னை ஸ்டோரீஸ் என்ற அந்த படத்தில் சமந்தா நடிக்க இருந்தார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருந்த நிலையில், இந்த வாய்ப்பு இவரை விட்டு கை நழுவி போயுள்ளது.  தற்போது சமந்தாவிற்கு பதிலாக ஸ்ருதி ஹாசன் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.  

மேலும் படிக்க | Rio Raj: மனைவிக்காக ஸ்பெஷல் போட்டோக்களை பதிவிட்ட ரியோ! வைரலாகும் புகைப்படங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News