12 ஆண்டுக்கு பின் குரு பெயர்ச்சி 2024.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், முழு ராசிபலன்

Jupiter Transit 2024: அடுத்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டில் குரு பகவான் தனது ராசியை மாற்றி பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த குரு பெயர்ச்சியால், வரும் ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், மேலும் எந்த ராசிக்கு பாதகமாக இருக்கும் என்பதை பார்ப்போம்.

ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் 12 ராசிகளுக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதன்படி கிரகங்களின் அதிபதியான குரு சுமார் 13 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். இப்போது 2024 ஆம் ஆண்டில், குரு ரிஷப ராசியில் வரும் மே 1 ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு சஞ்சார பலன் கிடைக்கிறது, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /12

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் குரு சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் உடல் மற்றும் மன அழுத்தத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். வருமானம் குறைவாகவும், செலவுகள் அதிகமாகவும் இருக்கும். ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

2 /12

ரிஷபம்: மே 1 ஆம் தேடிஜி 2024ல் குரு உங்கள் ராசியில் பெயர்ச்சி அடையப் போவது உங்களுக்கு நிதி நிலை பாதிக்கப்படலாம். இந்த காலகட்டத்தில், வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான சூழல் நிலவும். தொழில் மற்றும் நிதி நிலைமை நன்றாக இருக்கும். மேஷ ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும், மேலும் நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதைக் குறைக்கவும்.

3 /12

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான மற்றும் பலனைத் தரப் போகிறது. இந்த காலகட்டத்தில், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், மேலும் லாபம் மற்றும் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும். 

4 /12

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் நன்மை பயக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல சலுகைகள் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். குழந்தைகளால் சில நல்ல செய்திகளையும் பெறலாம். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும்.

5 /12

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். நிலுவையில் உள்ள வேலைகள் சுபமாக தொடங்க ஆரம்பிக்கும். குடும்பத்துடன் எங்காவது செல்ல திட்டமிடலாம். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனைவியிடமிருந்து ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரம் மற்றும் வேலைகளின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக இருக்கும். 

6 /12

கன்னி: கன்னி ராசிக்கு குருவின் 5ம் பார்வை கிடைக்கிறது. திருமண முயற்சியில் இருப்பவர்களுகு நல்ல திருமண வரன் அமையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் விலகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் மகிழ்ச்சியும், புதிய வேலை வாய்ப்பையும் பெற்றிட முடியும்.  

7 /12

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அரசியல்வாதிகளுக்கு சீட் கிடைப்பதில் சில பிரச்சினைகள் வரலாம். போராடினால்தான் வெற்றியை தொட முடியும். தென் திட்டை குருபகவானை தரிசனம் செய்யலாம். குல தெய்வத்தை வழிபடுவதன் மூலம் சாதிக்க முடியும்.

8 /12

விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு ரிஷப ராசியில் ஏற்படவிருக்கும் குருவின் பெயர்ச்சிக்கு பின்னர் நல்லருள் அதிகமாக கிடைக்கும். திருமண முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். உங்களின் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 

9 /12

தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் சுப பலன்கள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தடைகளை தாண்டி வெற்றி வந்து சேரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். இந்த குரு பெயர்ச்சி மகிழ்ச்சிகரமானதாக அமையப்போகிறது. 

10 /12

மகரம்: மகர ராசியினருக்கு எல்லா முயற்சிகள், செயல்களிலும் குருவின் நல்லருள் கிடைப்பதாக இருக்கும். எந்த வேலை செய்தாலும் அதில் குடும்பத்தின் நல்லாதரவு கிடைக்கும். துணையுடன் இணக்கமான சூழலும், அவரின் உதவியும் கிடைக்கும். பண பலன்கள் பெற்றிடலாம். குடும்பத்திலும், பணியிடத்திலும் நல்ல சூழல் நிலவும். 

11 /12

கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயரச்சியால் மனதில் தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். பதவிக்காக காத்திருப்பவர்களுக்கு வெற்றியும் அனுகூலமும் கிடைக்கும். 

12 /12

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகள் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. உங்கள் வாய்தான் உங்களுக்கு ஆயுதம் நீங்கள் பேசும் வார்த்தையே உங்களுக்கு எதிரானதாக திரும்பிவிடும் ஜாக்கிரதை. எந்த பிரச்சினை என்றாலும் கவனமாக கையாளுங்கள்.