அருண் விஜய் நடித்த மிஷன் அத்தியாயம் 1! ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

அருண் விஜய் நடிப்பில் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகியும் ஓடிடியில் வெளியாகாமல் இருந்த மிஷன் அத்தியாயம் 1 படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

 

1 /5

நடிகர் அருண் விஜய்யின் நடிப்பில் பொங்கல் அன்று வெளியான படம் தான மிஷன்: அத்தியாயம் 1. கேப்டன் மில்லர் மற்றும் அயலான் போன்ற பெரிய படங்களுடன் வெளியானது.  

2 /5

இருப்பினும் அந்த 2 படங்களைவிட இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.  ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரப்பேற்பை பெற்றது.  தனது குழந்தைக்காக போராடும் அப்பாவின் கதையை பற்றி படம் பேசி இருந்தது.  

3 /5

திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாட்கள் ஆனா போதிலும், மிஷன்: அத்தியாயம் 1 படம் ஓடிடியில் வெளியாகவில்லை.  முன்பு, பிப்ரவரி 16 ஆம் தேதி ஓடிடிக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில் வெளியாகவில்லை.    

4 /5

இது குறித்து ரசிகர்கள் அருண் விஜய்யிடம் கேட்டு இருந்தனர். இதற்கு X தளத்தில் பதிலளித்த அருண் விஜய், "மிஷன்: அத்தியாயம் 1 OTT வெளியீடு குறித்து பலர் என்னிடம் கேட்கின்றனர். லைகா நிறுவனம் அதனை சன் டிவியிடம் கொடுத்துள்ளதாக என்னிடம் கூறப்பட்டது.. நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும்" என்று பதில் அளித்தார்.  

5 /5

இந்நிலையில், சிம்ப்ளி சவுத் ஓடிடியில் படம் வெளியாக உள்ளது.  ஆனால் இந்தியாவியில் இந்த படத்தை யாரும் பார்க்க முடியாது.