ஆத்ம காரகர் சூரியனின் ஆவணி மாதப் பெயர்ச்சி! கவனமா இருக்க வேண்டியது யார்?

Sun Transit In Leo: ஒன்பது கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமான சூரியன், அனைத்து மனிதர்களின் ஆன்மாவாக கருதப்படுபவர். 

சூரியனின் பெயர்ச்சியால் உருவாகும் தமிழ் மாதம் ஆவணியில் யாருக்கு என்ன நடக்கும், காலம் எப்படி இருக்கும்? இது ஆகஸ்ட் 17 சூரியப் பெயர்ச்சி பலன்கள்

1 /13

சூரியப் பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், 4 ராசியினருக்கு கொஞ்சம் கவலை அளிக்கும். யாருக்கு நன்மை? யாருக்கும் மத்திம பலன்கள்? தெரிந்துக் கொள்வோம்

2 /13

கன்னி ராசியினருக்கு புதிதாய் பிறக்கும் ஆவணி மாதம் நல்ல வெற்றியைக் கொடுக்கும். இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உண்டு. இது தவிர, மகிழ்ச்சி, அமைதி, மகிமை மற்றும் செழிப்பு ஆகியவை வீட்டில் இருக்கும்.

3 /13

நினைத்தது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரத்தில் ஒத்துழைப்பற்ற சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு உண்டாகும்

4 /13

விருச்சிக ராசியினரின் அணுகுமுறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் ஆவணி மாத சூரியப் பெயர்ச்சி, ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். 

5 /13

 சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சியின்மை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும்

6 /13

ஆன்மிகப் பணியில் ஆர்வம் இருந்தாலும், மனதில் ஏதேனும் குழப்பங்கள் எழுந்துக் கொண்டே இருக்கும், நிம்மதி என்பது வெளியில் தேடுவதை விட மனதிற்குள் உருவாக வேண்டும் என்பதை இந்த சூரியப் பெயர்ச்சி புரிய வைக்கும், மற்றபடி, இந்த மாதம் ஏற்ற இறக்கம் இல்லாமல் சாதாரணமானதாக இருக்கும்

7 /13

வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் மிதமான லாபம் ஏற்படும். வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.

8 /13

ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். பொருளாதார சிக்கல்கள் நீங்கும்.

9 /13

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்

10 /13

கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை குறைப்பது நல்லது

11 /13

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக பணிகளில் சில சலுகைகள் கிடைக்கும்.

12 /13

 விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உறவுகளின் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.

13 /13

போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை மேம்படும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.