CWC 5: குக் வித் கோமாளியில் ‘இந்த’ 8 பேர் கன்ஃபார்ம்! முழு லிஸ்டை பாருங்க..

Cooku With Comali 5 Contesntants List : குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளதை ஒட்டி, இதில் கலந்து கொள்ள இருப்பவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. 

Cooku With Comali 5 Contesntants List : தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இருக்கிறது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் குக்கிங் மற்றும் நகைச்சுவை என இரண்டுமே கலந்து இருப்பதால், ரசிகர்கள் இதனை விரும்பி பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமாக இருக்கக்கூடிய சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொள்வர். கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பிக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள இருப்பவர்கள் யார் யார் என்று தெரியுமா?

1 /8

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நடிகர் வசந்த், இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்.

2 /8

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகியாக இருப்பவர், திவ்யா துரைசாமி. இவர், குக் வித் கோமாளி சீசன் 5ல் இருக்கிறாராம். 

3 /8

தமிழ் பேசும் வெளிநாட்டு விவசாயி, கிருஷ்ணா மெக்கன்சி. போன சீசனில் கலந்து கொண்ட பாண்டிச்சேரி ஆண்ட்ரியா போல, இவரையும் இந்த சீசனில் போட்டியாளராக இறக்க இருக்கின்றதாக கூறப்படுகிறது. 

4 /8

தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருபவர், விடிவி கணேஷ். இவரும் இதில் கலந்து கொள்ள இருக்கிறாராம். 

5 /8

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும் சமையல் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல். 

6 /8

பிரபல யூடியூபரான இர்ஃபான், தனது சமையல் கலையை காட்டுவதற்காக இப்போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7 /8

மலையாள நடிகையும், நடன கலைஞருமான ஷாலின் ஜோயா குக் வித் கோமாளி சீசன் 5-ல் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

8 /8

பிரபல டிவி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டேவும் குக் வித் கோமாளியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக இருந்தார்.