சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இரவில் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்..!!

Diabetes Diet Tips in Tamil: நீரிழிவு  என்பது ஒரு நாள்பட்ட நோய். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை சட்டென அதிகரிக்கச் செய்யும் சில வகையான உணவுகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.

நீரிழிவு நோயாளிகள் அதிக அளவு, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொண்டால், அவர்களின் இரத்த சர்க்கரை அளவு ஆபத்தான அளவிற்கு உயரும். எனினும், நமது உணவு பழக்கத்தின் மூலம் அதனை சிறப்பாக கட்டுபடுத்தலாம்.

1 /8

நீரிழிவு: இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால்,  உடலில் உள்ள நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். மேலும், இதய நோய்கள், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் பிற தீவிர நோய்களையும் ஏற்படுத்தும். எனினும், நமது உணவு பழக்கத்தின் மூலம் அதனை சிறப்பாக கட்டுபடுத்தலாம். 

2 /8

மைதாவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் வெள்ளை கார்போஹைட்ரேட்டுகள், இவற்றில் ஊட்டச்சத்து மதிப்பு என்பது கிடையாது. வெறும் கலோரிகள் மட்டுமே. இவை  இரத்த சர்க்கரை அளவை பெரிதும் அதிகரிப்பதோடு, உடல் பருமன், கொலஸ்ட்ரால் ஆகியவற்றையும் அதிகரிக்கலாம். 

3 /8

பதப்படுத்தப்பட்ட கோதுமை மாவு மற்றும் பிற ஆரோக்கியமற்ற கொழுப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படும் துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் பல இரசாயன பொருட்கள் தயாரிப்பில் இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை விரைவாக அதிகரிக்கின்றன.

4 /8

சர்க்கரை நோயாளிகள் இரவு உணவுடன் அல்லது அதற்குப் பிறகு இனிப்புகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இரவு உணவில், ஐஸ்க்ரீம், கேக், ஸ்வீட் போன்ற இனிப்பு உணவுகளை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு பெருமளவு அதிகரிக்கிறது. மறுநாளில் பாஸ்டிங் சர்க்கரை அளவும் வரம்புகளை மீறும்.

5 /8

இறைச்சியின் கிளைசெமிக் குறியீடு அதிகமாக உள்ளது. எனவே, இரவு உணவில் அசைவ உணவுகளை உண்பதால் சர்க்கரை அளவு அதிகமாகும். மேலும், அதிக மசாலாப் பொருட்களுடன் இறைச்சி உணவு தயாரிக்கப்படுகிறது, இது ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. காலை பாஸ்டிங் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், இரவில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

6 /8

பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வரம்பை மீறும். வறுத்த உணவுகளை இரவு உணவில் உட்கொண்டால், இரவு முழுவதும் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக காலையில் எடுக்கப்படும் பாஸ்டிங் சர்க்கரை அளவும் அதிகமாகவே இருக்கும். எனவே, வறுத்த பொருட்களை இரவு உணவில் சாப்பிட வேண்டாம்.

7 /8

குளிர்பானங்களை இரவில் மட்டுமல்ல எப்போதுமே, குடிக்கவே கூடாது. அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட சோடா பானங்களை குடித்தால் சக்கரை அளவு எகிறி விடும். ஸ்வீட் சிரப் சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் டீ, காஃபி போன்ற பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.