மீனத்தில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம்... அமோகமான வாழ்க்கை!!

Rahu Transit, Impact on Zodia Signs: ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகங்களாக கருதப்படுகிறார்கள். ராகு கிரகத்திற்கு அதற்கான சில அம்சங்கள் உள்ளன. 

ராகு தற்போது மீன ராசியில் உள்ளார். ராகு மற்றும் கேது எப்போதும் வக்ர நிலையில் பெயர்சிக்கிறார்கள். அக்டோபர் 29 ஆம் தேதி ராகு மீன ராசிக்கு மாறுகிறார். ராகுவின் இந்த பெயர்ச்சியால் ஐந்து ராசிக்காரர்களுக்கு மங்களகரமான நாட்கள் துவங்கவுள்ளன. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /9

ஒரு நபரின் ஜாதகத்தில் ராகு அசுபமான இடத்தில் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் அழிவை உருவாக்குகிறது. அதுவே ராகு சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபருக்கு பல நல்ல விளைவுகள் ஏற்படும்.

2 /9

ராகு பெயர்ச்சி: ராகு தற்போது மீன ராசியில் உள்ளார். ராகு மற்றும் கேது எப்போதும் வக்ர நிலையில் பெயர்சிக்கிறார்கள். அக்டோபர் 29 ஆம் தேதி ராகு மீன ராசிக்கு மாறுகிறார். 

3 /9

ராசிகளில் தாக்கம்: ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராச்சிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகனாம பலன்களை அளிக்கும். இந்த காலத்தில் இவர்கள் வாழ்வில் உச்சம் தொடுவார்கள். தொழிலதிபர்களும் இந்த காலகட்டத்தில் நல்ல லாபம் பெறலாம்.

4 /9

கடகம்: கடக ராசிக்காரர்கள் மீனத்தில் ராகுவின் பெயர்ச்சியால் கணிசமான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. ராகுவின் இந்த சஞ்சாரம் நீங்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. உங்கள் செல்வம் பெருகவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தொழிலதிபர்களும் இந்த காலகட்டத்தில் நல்ல லாபம் பெறலாம்.

5 /9

கன்னி: மீனத்தில் ராகுவின் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை இந்த காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் நஷ்டத்தைத் தவிர்க்க வியாபாரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இந்த நேரம் நிலையானதாகவும் சாதகமானதாகவும் இருக்கும்.

6 /9

துலாம்: மீனத்தில் ராகுவின் பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான விளைவை ஏற்படுத்தும். சட்ட விவகாரங்கள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் திடீர் பண ஆதாயங்களில் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றத்திற்கான வாய்ப்புகளும் இருக்கும். இந்த நேரம் அரசியலுடன் தொடர்புடையவர்களுக்கு சாதகமாக இருக்கும், மேலும் இது தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

7 /9

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் மீனத்தில் ராகுவின் சஞ்சாரத்தால் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். நிதி ரீதியாக, இந்த காலம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், முதலீட்டுக்கு இது ஒரு நல்ல நேரம். இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் உங்கள் செல்வத்தை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது சாதகமான காலகட்டம்.

8 /9

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சியின் தாக்கம் நன்மை தீமைகள் கலந்திருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சில நன்மைகளையும் பெறலாம். ஒட்டுமொத்தமாக, இந்த காலம் உங்கள் தொழிலுக்கு மிகவும் நன்றாக இருக்கும். அதே நேரத்தில், இன்று நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.