இன்னும் 21 நாட்களில் குரு உச்சம்.. இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

Guru Margi 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, குரு தனது சொந்த ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்திருப்பதால், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறலாம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஜோதிடத்தின்படி, குரு மேஷ ராசியில் 31 டிசம்பர் 2023 அன்று காலை 07:08 மணிக்கு வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இதற்குப் பிறகு, குரு அக்டோபர் 9, 2024 அன்று மதியம் 12:44 மணிக்கு வக்ர பெயர்ச்சி அடைவார்.

1 /5

குரு வக்ர நிவர்த்தி 2023: குரு தற்போது அதன் சொந்த ராசியான மேஷத்தில் அமைந்துள்ளது. ஆண்டின் இறுதியில் அதாவது டிசம்பர் 31ஆம் தேதி மேஷ ராசியில் குரு வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இது பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும். புத்தாண்டு 2024 சிறப்பாக இருக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இதனுடன், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகளையும் பெறலாம். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

2 /5

கடகம்: தொழில் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். இந்த புத்தாண்டில் உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். குடுaம்ப உறுப்பினர்களிடையே நிலவி வந்த சண்டை சச்சரவுகளும் முடிவுக்கு வரலாம். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும், இதன் காரணமாக உங்கள் கனவுகள் பலவும் நிறைவேறும்.

3 /5

சிம்மம்: உடல்நிலையிலும் முன்னேற்றம் காணலாம். நிதி நிலை வலுப்பெறலாம். வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். உறவுகளில் இனிமை கூடும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களும் வெற்றி பெறலாம். உங்கள் பிள்ளைகளால் சில மகிழ்ச்சியை பெறலாம்.

4 /5

தனுசு: உங்கள் தந்தையிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். இதனுடன், நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒரு மத பயணமும் செல்லலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும், இதன் காரணமாக பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.

5 /5

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.