குரு பெயர்ச்சி 2024: அதிர்ஷ்டம், பண வரவு.... மகிழ்ச்சி உச்சம் இந்த ராசிகளுக்கு தான்

Jupiter Transit In Taurus 2024 : மேஷ ராசியில் பயணித்து வரும் குரு பகவான் வரும் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறது. இதனால் மேஷம், கடகம் உள்ளிட்ட நான்கு ராசிக்காரர்களுக்கு பலன் அளிக்கும். 

குரு பகவான் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். மங்களகரமான குரோதி ஆண்டு வரும் சித்திரை 18ஆம் தேதி இந்த சுப பெயர்ச்சி நிகழப்போகிறது. இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

 

1 /8

மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடியில் இருந்து விடுதலை கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். 

2 /8

ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடி வரும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல செய்தி தேடி வரும். குரு பெயர்ச்சி காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

3 /8

மிதுன ராசிக்காரகளுக்கு குரு பெயர்ச்சிக்கு பின் சுப செலவுகள் அதிகரிக்கும். இதனால் நீங்கள் சற்று டென்ஷன் அடையலாம். சொந்த வீடு கட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்கலாம். பதிவு உயர்வு கிடைக்கும்.

4 /8

கடக ராசிக்காரர்களின் வருமானம் பெருகும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் ஒருவழியாக முடிவுக்கு வரும். கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

5 /8

சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை அதிகரிக்கும். வைர, தங்க ஆபரணங்களை வாங்குவீர்கள். சொத்து வாங்கலாம். அலுவலகத்தில் உங்களின் உழைப்பை திருடி சக ஊழியர் முன்னேறுவார். மற்றவர்களை நம்புவதை தவிர்க்கவும்.

6 /8

நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு திருமணம் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சுப செலவுகள் நடக்கலாம். பதவி உயர்வு உங்களை தானாகவே தேடி வரும்.

7 /8

குருவின் அருள் பெற காயத்ரீ மந்திரத்தை துதிக்கவும் "குரு ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத். ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்".

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.