100 வயதை கடந்து வாழ ஆசையா? ‘இதை’ தினமும் காலையில் செய்யுங்கள்!

Tips To Live Longer : பலருக்கு பல வருடம் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசை படுபவர்கள், தினமும் சில செயல்களை செய்ய வேண்டியது அவசியமாகும். அவை என்னென்ன தெரியுமா?

Tips To Live Longer : ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என சிலர் ஆசீர்வாதம் செய்யும் போது கூறுவதை கேட்டிருப்போம். பதினாறும் வாழில் பெறுகிறோமோ இல்லையோ, பெருவாழ்வு கண்டிப்பாக வாழ்ந்தே ஆக வேண்டும் என்று பலருக்கு ஆசை இருக்கும். அதிலும் முதுமை வந்தாலும் கூட இளமை தோற்றத்துடனும், நோயற்ற வாழ்வும் இருக்க வேண்டும் என பலர் கடவுளிடம் கேட்பதுண்டு. இப்படி, நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கு நாம் நமது உடலை இளமையாக இருக்கும் போதே நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இப்படி செய்வதால், நெடுங்காலம் நாம் நோயற்ற வாழ்வு வாழலாம் என்கின்றனர், அறிஞர்கள். அதற்கு தினமும் காலையில் சில வேளைகளை செய்ய வேண்டியிருக்கிறது. அதில், முக்கியமான வேலை ஒன்று குறித்து இங்கு பார்ப்போம். 

1 /7

யாருக்குதான் அதிக ஆயுள் வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்கும்? வயதாகி, பேரன், எள்ளு பேரன், கொள்ளு பேரனை எல்லாம் பார்த்த பின்பு பூவுலகிற்கு சென்றவர்களை கொண்டது, நம் ஊர். இப்படி, அதிக காலம் உயிர்வாழ்வதற்கு பெரிதாக முயற்சிகள் எடுக்க வேண்டியதில்லை என்றாலும் குறைந்தளவிற்கு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். 

2 /7

மூச்சுப்பயிற்சி செய்வது, ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்த உடல் நலன் சரியாக இருந்தாலே, ஆயுளும் அதிகரிக்கும். 

3 /7

மூச்சு பயிற்சியை, பிராணாயாமம், பஸ்திரிகா உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் கூறலாம். இதை தியான முறையில் இருந்து ஆரம்பிக்கலாம். 

4 /7

மனக்குழப்பம், அதிக யோசனை, பதற்றம் போன்ற மனம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் சரி செய்ய உதவுகிறது, மூச்சுப்பயிற்சி. 

5 /7

மூச்சுப்பயிற்சி செய்வதால், நுரையீரலுக்கும் நல்லது. இதை செய்யும் போது, எந்த கவனச்சிதறல்களும் இருக்க கூடாது. 

6 /7

மூச்சுப்பயிற்சியை, ஆரம்பத்தில் 3 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை செய்யலாம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 10 முதல் 20 நிமிடங்கள் வரை நீட்டிக்கலாம். 

7 /7

எந்த பயிற்சியை செய்வதற்கும் முன்னரும் மருத்துவர்களின் பரிந்துரையை கேட்டுக்கொள்வது நல்லது.