குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

Guru Gochar 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. குரு பகவானின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், புகழ், செல்வம், மகிமை மற்றும் புத்திசாலித்தனம் போன்றவற்றின் காரணியாக குரு கருதப்படுகிறார். அத்தகைய சூழ்நிலையில், தங்கள் ஜாதகத்தில் குரு வலுவான நிலையில் உள்ளவர்கள் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தைப் பெறுவார்கள். 

22 ஏப்ரல் 2023 அன்று, குரு பகவான் அதிகாலை 3.33 மணிக்கு அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழையப் போகிறார். இந்த மாற்றத்தால் பல ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

1 /5

ஜோதிட சாஸ்திரப்படி குரு இந்த ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருப்பார். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். கேதுவின் நக்ஷத்திரத்தில் வியாழன் நுழைவதால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

2 /5

மிதுன ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். தொழில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட பணிகள் விரைவில் முடிவடையும். இந்த நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.   

3 /5

அஸ்வினி நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைவது இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனுடன், நீங்கள் புதிய வேலை தேடினால், வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மேலும், மாணவர்கள் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவார்கள்.

4 /5

குருவின் பார்வை இந்த ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் விழப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், அஸ்வினி நட்சத்திரத்தில் வியாழன் நுழைவது நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். அதுமட்டுமின்றி உங்கள் பணியும் பாராட்டப்படும். நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகளும் சுமுகமாக நடைபெறும்.

5 /5

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.