Star Movie : ஒரே நாளில் இவ்ளோ கலக்‌ஷனா! ஸ்டார் படத்தின் வசூல் விவரம்..

Star Movie Box Office Collection : கவின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம், ஸ்டார். இந்த படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளதை தொடர்ந்து, ரிலீஸிற்கு பின்னர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் இப்படம் பெற்று வருகிறது. முதல் நாளில் இப்படம் கலெக்ட் செய்தது எவ்வளவு தெரியுமா? 

Star Movie Box Office Collection : இளன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம், ஸ்டார். இந்த திரைப்படத்தில் கவினுக்கு தந்தையாக லால் நடித்திருக்கிறார். டாடா படத்தின் வெற்றியால் கவின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழ, உடனே ஸ்டார் படத்தை சைன் செய்தார் கவின். இந்த படத்தை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். தன் கனவுகளை அடைவதற்காக போராடும் ஒரு இளைஞன், அதில் வெற்றி பெற்றானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. இதை இடத்தில் எவ்வளவு அழகாக, கச்சிதமாக கூற முடியுமா அப்படி கூற முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றிருக்கின்றனர். யுவன் இசையில் பாடல்கள் கொஞ்சம் கேட்கும் வகையில் இருக்கிறது. இந்த படம், முதல் நாளில் கலெக்ட் செய்த தொகை என்ன? இங்கு பார்ப்போம். 

1 /7

கவின் நடிப்பில் உருவாகியிருக்கும் படத்தை இளன் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு, யுவன் சங்கர் ராஜா இந்த படம் மூலம் கம்-பேக் கொடுத்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

2 /7

கவின், டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து இதில் நடிக்க சைன் செய்தார். ஆனால் முதலில் இதில் நடிக்க இருந்தவர் ஹரிஷ் கல்யாண். 

3 /7

கவின், இந்த படத்தில் ஒரு நடிகராக ஜெயித்திருக்கிறார். இதுவரை, தன் நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் அளவிற்கு இவருக்கு படங்கள் அமைந்ததில்லை. ஆனால், இந்த படத்தில் அவருக்கு இதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

4 /7

ஸ்டார் திரைப்படம், கனவுகளை துரத்தி ஓடும் அனைத்து இளைஞர்களுக்கும் சமர்பணமாக எடுக்கப்பட்டிருக்கிறது. 

5 /7

ஸ்டார் படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், இதிலும் குறைகள் இல்லாமல் இல்லை. ஒரு சில இடங்களில் படம் கொஞ்சம் இழுவையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். 

6 /7

க்ளைமேக்ஸ் காட்சியும், இடைவேளைக்கு முந்தைய காட்சியும் மனதில் நிற்பதாகவும் நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  

7 /7

ஸ்டார் திரைப்படம் ஒரே நாளில் 2.5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், முன்பதிவில் மட்டும் சுமார் 1.5 கோடி ரூபாய் வசூல் வந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.