குரு பெயர்ச்சி 2024: பதவி உயர்வு, பணபலம் சேரக்கூடிய அதிர்ஷ்டசாலி ராசிகள் இவைதான்

Guru Peyarchi Palan: குரு பகவான் குரோதி ஆண்டில் சித்திரை 18ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு திடீர் பணவரவு, ஜாக்பாட் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள்: குரு பார்த்தால் கோடி நன்மை என்பது ஜோதிட நம்பிக்கை. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகும் குருபகவானால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் பண வரவும் உண்டாகும். எனவே அந்த ராசிகள் எவை என்று பார்க்கலாம்.

1 /8

மேஷம்: பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். பண வரவு ஏற்படும். ஆடை ஆபரணங்களை வாங்கலாம். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.  பரிகாரம்: முடிந்த போதெல்லாம் வாராகி அம்மனை வழிபடவும்.   

2 /8

கடகம்: தொழிலில் லாபம் கொட்டும். பொருளாதார நிலை மேம்படும். மனக்குழப்பங்கள் நீங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். பரிகாரம்: சிவ பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.  

3 /8

கன்னி: குரு பெயர்ச்சியால் நீங்கள் மன உளைச்சலில் இருந்து மீள்வீர்கள். கடன் தொல்லை நீங்கும். அதிர்ஷ்டமும் கோடீஸ்வர யோகமும் உண்டாகும். றவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு செய்வதன் மூலம் துன்பங்கள் நீங்கும்.    

4 /8

துலாம்: நிலுவையில் இருந்த வேலைகளை முழு மூச்சில் முடிப்பீர்கள். பணம் வரவு வீடு தேடி வரும். நற்பலன்கள் அதிகரிக்கும். புதிய நிலம் அல்லது வாகனம் வாங்கலாம்.  பரிகாரம்: வியாழக்கிழமை சிவ ஆலயம் சென்று வணங்கவும்.    

5 /8

விருச்சிகம்: தைரியம், லாபம் பெருகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். விரைவில் திருமணம் நடைபெறும். வாழ்க்கைத் தரம் உயரும்.  பரிகாரம்:ல் வீட்டின் அருகில் இருக்கும் குரு தட்சிணாமூர்த்தியை தினமும் வணங்கவும்.  

6 /8

மகரம்: அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். தடுமாற்றம் நீங்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்ல நிறுவனத்திலிருந்து வேலை வாய்ப்பு கிடைக்கும்.  பரிகாரம்: வியாழக்கிழமையன்று குரு பகவானை வணங்கவும்.    

7 /8

மீனம்: கணவன்-மனைவிக்கு இடையே அன்பும், அந்நியோன்யமும் அதிகரிக்கும். குருவின் பார்வை எதையும் தைரியமாக முடிவெடுக்கும் சக்தியைத் தரும்.  பரிகாரம்: வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கவும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.