குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் ஏப்ரல் 2024 வரை ஜொலிக்கும்

Guru Gochar 2023: ஜோதிடத்தில், குரு அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் திருமணத்தின் காரணியாக கருதப்படுகிறது. தற்போது குரு  வியாழன் மேஷ ராசியில் இருக்கிறார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தருவார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2023: குருவின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு நல்ல அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறார். ஜாதகத்தில் குரு சுபமாக இருந்தால், அந்த நபர் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி பெறுவார், அவருடைய அதிர்ஷ்டம் மிக வேகமாக உயரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

1 /7

குரு பெயர்ச்சி: 2023 ஆம் ஆண்டில், குரு ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்தார், தற்போது மே 1, 2024 வரை மேஷ ராசியில் தான் இருப்பார். இது 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால் 5 ராசிக்காரர்கள் மட்டும் பல நன்மைகளைப் தரும். எனவே அடுத்த 11 மாதங்களுக்கு எந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.  

2 /7

மேஷம்: அடுத்த வருடம் வரை இந்த ராசிக்காரர்களுக்கு நிறைய சுப பலன்களைத் தரும். பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், உதவியாலும் வெற்றி பெறுவீர்கள். தடைகள் நீங்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  

3 /7

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி வெற்றியைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரம் பெருகும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் தொடர்புகள் ஏற்படும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.  

4 /7

கன்னி: குரு ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு பண பலன்களைத் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.  

5 /7

துலாம்: குரு சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு பண லாபத்தை தரும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ள முடியும். புதிய சொத்து-வாகனம் போன்றவற்றை வாங்கலாம்.  

6 /7

மீனம்: மீனத்தில் குரு சஞ்சாரம் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும், இதன் காரணமாக நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். மூத்த அதிகாரிகள் உதவுவார்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்களை வாங்கலாம். சுற்றுலா செல்லலாம்.

7 /7

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.